இருமல் மருந்து விவகாரத்தில் நடந்தது என்ன
தமிழக அரசு விளக்கம் சென்னை, அக்.10- மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மரணத்திற்கு காரண மான நச்சு கலந்த இருமல் மருந்தை தயாரித்த சென்னை நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட் டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “அக்டோபர் 1 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து கோல்ட்ரிஃப் சிரப் குறித்த விவரம் பெறப்பட்டது. இதையடுத்து, சந்தேகத்திற் குரிய கோல்ட்ரிஃப் சிரப் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட் டது. மேலும் நடைபெற்ற ஆய்வில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அத்துடன் சென்னையில் உள்ள பகுப் பாய்வு கூடத்திற்கும் அனுப்பப்பட்டது. அந்த சிரப்பில் டை எதிலீன் கிளை கால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்து உற்பத்தியை நிறுத்திய துடன் அந்த ஆலை மூடப்பட்டது. இந்நிலையில்தான், அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், உரிய ஆய்வு மேற் கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
