tamilnadu

img

செங்கொடியால் சிவக்கும் மேற்குவங்கம்

மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ(எம்)) ஆதரவு மற்றும் வெற்றியை தடுக்கும் வகையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக குண்டர்கள் பல்வேறு வகையில் வன்முறை அரங்கேற்றினர். அதாவது வேட்புமனுத் தாக்கல் தடுப்பது முதல் தோல்வி பயத்தில் சிபிஐ(எம்) தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் இதனை எல்லாம் கையில் வெறும் செங்கொடியோடு கம்பீரமாக எதிர்கொண்டு மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் மாநிலத்தின் கணிசமான பஞ்சாயத்துக்களை சிபிஐ(எம்)  கைப்பற்றியது. பஞ்சாயத்துகளை கைப்பற்றிய மகிழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மேள, தாளங்களுடன், சிவப்பு கலர் பொடிகளை முகத்தில் பூசி கொண்டாடி வெற்றி களிப்பை வெளிப்படுத்தினர்.