tamilnadu

img

அரசியல்மயப்படாத தலைமையும், ரசிகர் மனநிலையில் தொண்டர்களும்

அரசியல்மயப்படாத தலைமையும், ரசிகர் மனநிலையில் தொண்டர்களும்

நடிகர் விஜய் தலைமையில் புதிதா கத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்  கழகம் (தவெக), தேர்தல் பரப்புரை யைத் தொடங்கிய சில நாட்களிலேயே, கரூரில் நடந்த விரும்பத்தகாத உயிரி ழப்பு சம்பவங்களால் பெரும் அதிர்வ லைகளை ஏற்படுத்தியது. கரூரில் மட் டும் இது எப்படி நடந்தது எனத் தவெக  கேள்வி எழுப்பிய நிலையில், உண்மை யில் விஜய் பங்கேற்ற நாமக்கல், விக் கிரவாண்டி, மதுரை, திருவாரூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இத்த கைய விரும்பத்தகாத சம்பவங்களும், குளறுபடிகளும் அரங்கேறியுள்ளன என் பது நிதர்சனமான உண்மை. இதனை புள்ளி விபரங்களாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் செய்தியாளர் சந்திப் பில் வெளியிட்ட ஆவணம் சாட்சி. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, நாமக்கல் மற்றும் கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என  அறிவிக்கப்பட்டது. நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் வந்தது மதியம் 2.30 மணிக்குத்தான். இந்தக் காலதாமதமும், முறையான ஏற்பாடுகள் இல்லாததுமே நாமக்கல் லில் குழப்பங்களுக்கு வழிவகுத்தன. வார விடுமுறை தினம் என்பதால்,  கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறு வர்கள் என மிகக் குறைந்த வயதினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் காலை 7 மணிக்கே நாமக்கல்-சேலம் சாலையில் கூடினர். உளவுத்துறையின் கணக்குப்படி, குறுகிய இடத்தில் கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்டோர் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்தி ருந்தனர். கூட்டத்தின் காரணமாக நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள  சுமார் 80 சதவிகித கடைகள் மூடப்பட் டதால், அன்றாட வாழ்வாதாரத்தை வியாபாரிகள் இழந்தனர். காலை 7 முதல் 9 மணி வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப் பட்ட நிலையில், அதன் பிறகு நிர்வாகி கள் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். உணவு, கழிப்பிட வசதி ஏதும் செய்யப்படாததால், அதி காலையில் இருந்து காத்திருந்த கூட் டம், கொளுத்தும் வெயிலில் சோர்வ டைந்தது. விஜய் வருவார் எனப் பல  மணி நேரம் காத்திருந்த நிலையில், அரசியல்மயப்படாத ரசிகர் மனநிலை யில் இருந்த தொண்டர்கள் சாகசங்க ளை செய்யத் துவங்கினர். உயரமான  கட்டிடங்கள், கடைகளின் கூரைகள், பிளக்ஸ் பேனர்களுக்காக வைக்கப்பட் டிருந்த மூங்கில் கம்பங்கள் ஆகிய வற்றின் மீது ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே தனியார் மருத்து வமனையின் முன்சுவர் ஒன்று இடிந்து விழுந்ததும் குறிப்பிடத்தக்கது. போதிய குடிநீர் வசதி இல்லாததா லும், நீண்ட காத்திருப்பு மற்றும் கூட்ட  நெரிசலாலும் பெண்கள் உள்ளிட்ட பலர் மயக்கம் அடையத் துவங்கி னர். 40க்கும் மேற்பட்டோர் மயக்கம டைந்தனர்; படுகாயம் அடைந்த ஒரு பெண்மணி சேலம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மதியம் 2.30 மணிக்கு தாமதமாக வந்த விஜய், வாகனத்தை நெருக்கித் தள்ளிய கூட்டத்தின் காரணமாக, குறிப் பிட்ட எல்லையை அடைய முடியாமல் 50 மீட்டர் முன்பாகவே நின்று பிரச்சா ரத்தை மேற்கொள்ள நேரிட்டது. அவர்  பேசத் துவங்கிய உடனேயே அங்கி ருந்து கூட்டம் வெளியேறத் துவங்கி யது. எனினும், ஆம்புலன்ஸ் மூலம் மயக்கமடைந்தவர்களை ஏற்றிச் செல் லும் நிகழ்வு நாமக்கல்லிலும் அரங்கேறியது. போர்க்களம் போல காட்சியளித்த நாமக்கல் சாலை நாமக்கல்லில் நடந்த நிகழ்வுக்குப்  பிறகுதான், கரூரில் பலர் மயங்கி  விழுந்து உயிரிழந்த துயர சம்பவம்  நடந்தது. கரூரில் ஏதோ எதிர்க்கட்சியி னர் திட்டமிட்டு சதி செய்தது போலவே  தவெக நிர்வாகிகளும், எதிர்க்கட்சியின ரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கரூருக்கு முன்பாகவே நாமக் கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், விஜயின் தாமதமான வருகை, அரசி யல்மயப்படாத நிர்வாகிகள், இளம்  வயது ரசிகர்களின் ஒழுங்குபடுத்தப்ப டாத ஆர்ப்பாட்டம், சம்மந்தமே இல்லா மல் காவலர்களுடன் சண்டைக்குச் செல்லும் செயல்கள் போன்றவை பல இடங்களில் நடந்தேறியுள்ளன. நாமக்கல்லில் கூட்டம் நிறைவ டைந்த பிறகு, நாமக்கல்-சேலம் சாலை  போர் நடந்த பகுதி போல காட்சிய ளித்தது. இதுவரை எந்த அரசியல் கட் சிக்கும் நடந்திராத ஒரு விசித்திரமான சம்பவம் தவெக கூட்டங்களில் நடந் தது. தங்கள் கட்சியின் பிளக்ஸ் பேனர் களை சொந்த கட்சியினரே கிழித்தெறிந்த தும், மூங்கில் கம்பங்களை சாலையில் வீசிச்சென்ற சம்பவங்களும் அரங்கே றியது. நூற்றுக்கும் மேற்பட்ட காலணி களும், கிழிந்த கட்சித் துண்டுகளும் குவியல் குவியலாகக் கிடந்தன. உண் மையான கட்சித் தொண்டன் ஒருபோ தும் தன் கட்சியின் பிளக்ஸை கிழிக் கவோ, கட்சித் துண்டைத் தரையில் போட்டு மிதிக்கவோ மாட்டான். இந்தக்  காட்சிகள் சட்டெனக் கூடிச் சிதறும் ரசி கர் கூட்டத்தை மட்டுமே பிரதிபலிப்ப தாக உள்ளது. கூடியிருந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் பேர் 13  முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறு மிகள் மட்டுமே என்றும், அவர்களுக்கு ‘விஜய்’ மற்றும் ‘தவெக’ என்பதைத் தவிர வேறு எந்த அரசியல் புரிதலும் இல்லை. நடிகர் விஜய் வந்து போன பிறகு, நாமக்கல் சாலை, போர்க்களம் போல  காணப்பட்டது. இதனையடுத்? நாமக் கல் காவல்துறை சார்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடர் அசம்பாவிதங்கள் அனைத்தும், அரை சதவீதம் கூட அரசியல்மயப்படாத, அரசியல் புரிதல் இல்லாத தலைவர் மற்றும் அவர் பின்னால் இருக்கும் ரசி கர் மனநிலையிலுள்ள இளைஞர்கள் ஆகியோரின் விளைவாகவே நடப்ப தாக, நாமக்கல் மாவட்ட அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் இத்தகைய மோசமான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், தமிழக வெற் றிக் கழகம் குறிப்பாக அதன் தலைவர் விஜய், தன்னை முழுமையாக அரசி யல்மயப்படுத்திக் கொண்டும், தனது  ரசிகர் கூட்டத்தை அரசியல் ஒழுங்குமு றைகளையும், பாதுகாப்பு நெறிமுறைக ளையும் புரிய வைப்பதே தீர்வாக இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய துயரத்திற்கு பிறகும், மூன்று நாட்கள் கழித்து வெளியிட்ட கானொளியில் கூட, நடிகர் விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தோ, சம்பவத்திற்கு பொறுப்பேற்றோ ஒரு வரி கூட சொல்லாமல், அடுத்தவரை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாய் இருக்கிற ஒரு தலைவனால், இது சாத்தியமா என்பதை காலம்தான் பதில ளிக்கும். (எம்.பிரபாகரன்)