tamilnadu

img

234 தொகுதிகளிலும் வெற்றி ஒன்றே இலக்கு! முதல்வரின் தேநீர் விருந்தில் பெ. சண்முகம் பேச்சு

234 தொகுதிகளிலும் வெற்றி ஒன்றே இலக்கு! முதல்வரின் தேநீர் விருந்தில் பெ. சண்முகம் பேச்சு

சென்னை, மார்ச் 30 - தமிழ்நாடு சட்டப்பேர வைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் முத லமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேநீர் விருந்து அரசியல் வட் டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வில் பங் கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்மு கம், வரவிருக்கும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் வலிமையையும் மாபெரும் வெற்றியையும் உறுதிப் படுத்தும் வகையில் உரை யாற்றினார். நம்முடைய கூட்டணி நீண்டகாலமாக மதச்சா ர்பற்ற கூட்டணியாகத் திக ழ்ந்து வருகிறது என்றார். மேலும், இந்த 2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இப்போது இது ஒரு ‘மாபெரும் மதச்சார்பற்ற கூட்டணி’ என்று சொல் லத்தக்க அளவில் மிகப்பிரம் மாண்டமான கூட்டணியாக உருவெடுத்துள்ளதை அவர் பெருமையுடன் சுட்டிக் காட்டினார். முதலமைச்சர் குறிப் பிட்டதைப் போலவே, தமிழ் நாட்டின் 234 தொகுதிகளி லும் வெற்றி பெறுவது என் பதுதான் இந்தக் கூட்டணி யின் மிக முக்கியமான நோக்கம் என்று அவர் தெரி வித்தார். இந்த இலக்கை எட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள அனை த்துக் கட்சித் தோழர்களும் ஒரே மனிதனாக அணி திரள வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். ‘வெற்றி, வெற்றி, வெற்றி’ என் கிற ஒற்றைக் குறிக்கோளு டன் தேர்தல் பணிகள் இன்று முதல் வீரியத்துடன் தொடங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.  தனது உரையின் நிறை வாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் திமுக  தலைமையிலான ஆட்சி அமையும் என்பதும், இப்போதைய முதலமைச்சர் அவர்களே மீண்டும் முதல மைச்சராகப் பதவியேற்பார் என்பதும் உறுதி என்று மகிழ்ச்சியுடன் தெரிவித் தார். முன்னதாக முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசு கையில், நாங்கள் எண்ணிக் கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் விளைந்த கூட்டணி. தமிழ் நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றிபெறப்போகும் கூட்டணி என்று குறிப்பிட்டார்.