வீரமாகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
அறந்தாங்கி, ஜூலை 11- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் முழுவதும் நடைபெறும். இந்நிலையில், வெள்ளியன்று வீரமாகாளி அம்மனுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில், செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் ஹாரிஸ் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து இரவு முழுவதும் பல்வேறு தரப்பினர் மேள தாளத்துடன், வாணவேடிக்கையுடன் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். மேலும் பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூச்சொரிதல் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியினர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கி, ஒரு மாதம் நடைபெறும். ஜூலை 30, 31 தேர்திருவிழா, ஆகஸ்ட் 19 இல் தெப்பத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும்.