tamilnadu

img

‘பைடனின் கரங்களில் அப்பாவி மக்களின் ரத்தம்’

வாஷிங்டன்,மே 16 - இஸ்ரேலின் இனப்படு கொலைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதை கண்டித்து  மே 15 அன்று  ஒரு யூத அமெ ரிக்க அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க உள்துறை தலைமை அதிகாரியின் சிறப்பு  உதவியாளரான லில்லி கிரீன்பெர்க் கால் என்ற அந்த அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.  காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பேரழிவுகளுக்கும், இனப்படுகொலைக்கும் ஜனாதிபதி பைடன்  தொடர்ச்சி யாக ஆதரவு கொடுத்து வரும் நிலையில், மனச்சாட்சியுடன் என்னால் தொடர்ந்து பணி யாற்ற  முடியாது என்று அமெரிக்க உள்துறை தலைமை அதிகாரியின் சிறப்பு உதவியாளர்  லில்லி கிரீன் பெர்க் கால் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அவரது ராஜி னாமா கடிதத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் “கைகளில் அப்பாவி மக்களின் இரத்தம் உள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பாலஸ்தீன ர்களை கொத்துக் கொத்தாக இஸ்ரேல்  கொலை செய்வ தற்கு அமெரிக்கா கொடுத்து வரும் ஆதரவை நியாயப்ப டுத்த யூத மக்களை பைடன் அரசு பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  இஸ்ரேலின் போர்க்குற்றங் கள், நிறவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை  நீண்ட கால மாகவே  அமெரிக்கா ஆதரித்து வந்துள்ளது என்றும் லில்லி கிரீன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.  

போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்து வதற்கும்,  உதவி செய்வ தற்கும் அமெரிக்க  ஜனாதி பதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அமெரிக்கா போரை  நிறுத்த கடந்த எட்டு மாதங் களாக  எதுவும்செய்யவில்லை.  இஸ்ரேல் இல்லையென் றால் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று ஜோ  பைடன் பேசியதை குறிப்பிட்டு பேசிய லில்லி கிரீன்பெர்க், பைடன் யூதர்களை அமெரிக்க போர் இயந்திரத்தின் முக மாக்குகிறார் என கடுமை யாகச் சாடினார்.   அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும்  இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்காவின் உயர்மட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். லில்லி கிரீன்பெர்க் ராஜி னாமா செய்வதற்கு ஒரு வாரத்திற்கு  முன்னதாக ஹாரிசன் மான் என்ற அமெரிக்க  ராணுவ அதிகாரி பாதுகாப்பு புலனாய்வு அமை ப்பில்  இருந்து ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா  செய்த போது, அமெரிக்கா வின் நிபந்தனையற்ற இஸ் ரேல் ஆதரவு போக்கினால் அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் படு கொலை செய்து வருகிறது. மேலும் பாலஸ்தீனர்களை செயற்கை பஞ்சத்தில் தள்ளி யுள்ளது என்று குறிப்பிட்டார். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் அந்நாட்டு தலை நகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல்  தூதரகம் முன்பு   அமெரிக்காவின் இனப்படு கொலை ஆதரவு நிலைப் பாட்டை    கண்டித்து “இனப்படு கொலைக்கு நான் உடந்தை யாக இருக்க மாட்டேன்” என தீக்குளித்து தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

;