tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு வாரத்தில்  முடியும் - டிரம்ப்

உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் ஒரு வாரத்தில் முடி வுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  அறிவித்துள்ளார். டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில்  டிரம்ப் இந்த தக வலை தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா தொடர் போரை விரும்பவில்லை அதனால் ஐரோப்பியா உக்ரைனுக்கு அனுப்ப உள்ள  அமைதி காக்கும் படையால்  ரஷ்யாவிற்கு “எந்த பிரச்ச னையும் இல்லை” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.    இதனைத் தொடர்ந்து, “நான் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திப் பேன்.

 அவர் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத் திடலாம்” என்றும் கூறினார். இந்த சந்திப்பில், “போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனை இணைக்க வேண்டும் அந்நாட்டையும்  இணைத்து செயல்பட வேண்டும்” என டிரம்ப்பை வலியுறுத்தியுள்ளார் மக்ரோன். பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடந்த செய்தி யாளர் சந்திப்பில், “பேச்சு வார்த்தையின் ஒரு பகுதி யாக ரஷ்யாவிற்கு நிலப்பகு தியை விட்டுக்கொடுக்க உக்ரைன் தயாராக உள்ளதா” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “நாங்கள் அது குறித்து பின்பு  பார்ப்போம்” என்று டிரம்ப்  பதிலளித்த துடன்  பேச்சுவார்த்தைகள் இப்போது ஆரம்ப கட்டத் தில்தான் இருக்கின்றது” எனவும் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் அமலா கும் பட்சத்தில் அமைதி காக்கும் படை  உட்பட உக் ரைனுக்கு பாதுகாப்பு உத்தர வாதங்களை வழங்க ஐரோ ப்பா தயாராக இருப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ பதிலளிக்க உத்தரவு மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷின் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிபிஐ தரப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.