tamilnadu

img

10-ஆம் வகுப்பில் சாதித்த பழங்குடியின மாணவி!

திருச்சிராப்பள்ளி, மே 13- மே 10-ஆம் தேதி  10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியினருக் கென அரசு சார்பில் நடத்தப்படும் பள்ளி களைச் சேர்ந்த 922 மாணவர்கள், 906 மாணவிகள் என மொத்தம் 1,828 பேர் தேர்வெழுதியிருந்தனர். இவர்களில் 846 மாணவர்கள், 844 மாணவிகள் என மொத்தம் 1,620 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.45 சதவீதமாக உள்ளது.  மாநிலம் முழுவதும் கணிதத்தில் 20,691 பேர் 100-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் பழங்குடி யின மாணவ-மாணவிகளும் உள்ள னர். இப்படி தேர்ச்சி பெற்றவர்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் பள்ளியில் படித்த மாணவி ஆர்.தனுஷா-வும் ஒருவர். கணிதத்தில் 100-க்கு 100  ஆர்.தனுஷா 500-க்கு 450 மதிப்பெண் கள் பெற்றுள்ளார். கணிதத்தில் 100-க்கு 100 பெற்றுள்ளார். இவரது தந்தையும் தாயும் முந்திரித் தோட்டத் தொழிலாளர்கள்.  தனுஷா-வின் சொந்த ஊர் வண்ணாடு ஊராட்சியில் உள்ள சில்லையூர் கிராமம். வண்ணாடு கிராமம் பச்சமலை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இவர்கள் செல் போனில் பேச வேண்டு மென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர்  வந்தால் தான் சிக்னலே கிடைக்கும்.  ஆர்.தனுஷா சின்ன இலுப்பூரில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி  மாணவியாவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறை யூர் பகுதியில் உள்ள ஐந்து பழங்குடி யினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர் கள் பெரும்பாலோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வரும் தனுஷா தாய்-தந்தையுடன் இணைந்து வயல்களில் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கலெக்டராக விருப்பம் தனது மகளின் சாதனை குறித்து தாய் ராதிகா கூறுகையில், நாங்கள் முந்திரி சாகுபடி செய்கிறோம். படிப்பு டன், வேலையிலும் எங்களுக்கு எனது மகள் நிறைய உதவிகள் செய்வாள். அவள் எதைப் படிக்க விரும்புகிறாரோ அதற்கு நாங்கள் துணையாக இருந்து அவளுடைய கனவை நனவாக்கு வோம் என்றார்.   பள்ளியின் தலைமையாசிரியர் பி.செல்வம் கூறுகையில், “எங்கள்  பள்ளி மாணவி சென்டம் பெற்றுள் ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் 450 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த அவர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ்  தனது கடின உழைப்பால் சாதித்துக் காட்டியுள்ளார்.  விடுதியில் தங்கிப்படித்ததால் அவருக்கு கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தோம். ஆங்கிலத்தில் 90-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந் தால், 480-க்கு மேல் மதிப்பெண் பெற்றிரு ப்பார், பள்ளி வரலாற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி என்ற சாதனையைப் படைத்திருக்கலாம். அடுத்த ஆண்டிலும் எங்கள் பள்ளி சாதிக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்றி வருகிறோம்” என்றார். தனுஷா கூறுகையில், “நான் கலெக்டராகி  என் பகுதி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். அந்த வகையில் எனது முதல் வெற்றியை சாத்தியமாக்கிய ஆசிரியர் ஆர்.சுஜி, தலைமை ஆசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.