டி.ஆர்.இ.யூ மாநாட்டு கொடிப்பயணம்
டி.ஆர்.இ.யூ 35 ஆவது மண்டல மாநாடு சென்னையில் அக்.8, 9 ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஏற்றப்பட உள்ள மாநாட்டு கொடியானது, கடந்த மாநாடு நடந்த திருச்சியில் இருந்து செவ்வாய் அன்று எடுத்துச் செல்லப்பட்டது. பொன்மலை சங்கத்திடலில் நடந்த மாநாட்டு கொடிப்பயண நிகழ்ச்சிக்கு டி.ஆர்.இ.யு கோட்டத் தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் எடுத்துக் கொடுக்க அதனை டி.ஆர்.இ.யு உதவி பொதுச் செயலாளர் சந்தானசெல்வம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் மாறன், டி.ஆர்.இ.யு நிர்வாகிகள் பத்ருதீன், கார்த்திக் உள்பட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
