tamilnadu

img

பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டத்திற்கு பயிற்சி

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி  காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

தஞ்சாவூா், ஜூலை 18-  தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை சரி செய்யக்கோரி, பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வியாழக்கிழமை சென்றனர். பின்னர், ஊராட்சி செயலாளர் ரமேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு சிந்தாமணி பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனை, போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும். 6 ஆம் எண் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் செயலற்ற ஆழ்குழாய் கிணற்றை பழுது நீக்கி செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  இந்த மனு மீது, உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சிச் செயலாளர் உறுதி அளித்தார்.