tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாட்டை நோக்கி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளில் மதுரை மாநகர்-புறநகர் மாவட்ட கட்சித் தலைவர்கள், தோழர்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். உழைக்கும் மக்களுக்காகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாவட்ட மக்கள் மனமுவந்து நிதி வழங்கி வருகின்றனர்.  மாநாட்டிற்கான நிதி திரட்டும் பணியில் கட்சிக் கிளைத் தோழர்கள் முதல் பகுதிக்குழு, மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு தோழர்கள், மாவட்டச் செயலாளர்கள் வரை அன்றாடம் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் அருள்தாஸ்புரம் பகுதியில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமையில் நடைபெற்ற நிதி திரட்டும் பணி.