சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
உதகை, அக்.19- கோத்தகிரியில் கேரளம் மாநில சுற்றுலாப் பயணிகள் வந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. நீலகிரி மாவட்டத்திற்கு கேரளம் மாநில சுற்றுலாப் பயணி கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல் வது வழக்கம். இந்நிலையில், கோத்தகிரி அருகே மரள கம்பை பகுதிக்கு கேரள மாநில சுற்றுலாப் பயணிகள், மினி பேருந்து மூலம் சுற்றுலா வந்தனர். அப்போது மினி பேருந்து மேடான பகுதியில் ஏற முடியாமல் போனதால், ஓட்டு நர் பேருந்தில் இருந்தவர்களை இறங்கச் சொல்லியுள்ளார். இதன்பின் மெதுவாக வாகனத்தை பின்னோக்கி எடுக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந் தது. இதனிடையே, உடனடியாக ஓட்டுநர் கீழே குதித்து தப்பித்தார். அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கி யதால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பித்தனர். இச் சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்
தருமபுரி, அக்.19- கரகதஹள்ளியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி யில் கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கரகத ஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப் பில், மழைக்காலம் வந்துவிட்டாலே பல்வேறு வகையான காய்ச்சல் வருகிறது. சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று பிடித்து வைத்துள்ள நீரில் புழு இருக்கிறதா? என ஆய்வு செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி களில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் குளோரின் தெளிப்ப தில்லை, இதுகுறித்து கரகதஹள்ளி கிராம ஊராட்சி நிர்வா கம், வட்டார வளா்ச்சி அலுவலர், ஆட்சியர் உள்ளிட் டோரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது, ஒரு வாரத்துக்குள் அப்பகுதிகளில் சுத்தம் செய்யு மாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே, குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்காத வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.
வெறிநாய் கடித்து ஆடு பலி
ஈரோடு, அக்.19- ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம், முகாசி பிடாரியூர் கிராமத்தில் ஞாயிறன்று அதிகாலை வெறி நாய்கள் கடித்து விவசாயியின் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு உயிரிழந்தது. செந்தாம்பாளையம், கிழக்கு தோட்டம் புதூ ரைச் சர்ந்த நாகராஜ் என்பவரின் செம்மறி ஆட்டுப்பட்டியில் வெறி நாய்கள் புகுந்து கடித்ததில் ஒரு ஆடு உயிரிழந்தது. மூன்று ஆடுகள் படுகாயமடைந்தன.
காற்று மாசு: பதிவு செய்ய 3 இடங்களில் கருவிகள்
சேலம், அக்.19- தீபாவளி பண்டிகையின் போது, சேலம் மாநகரில் ஒலி அளவையும், காற்று மாசு அள வையும் பதிவு செய்யும் வகையில் 3 இடங் களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, அனை வரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகளை வெடிக்க தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. மேலும், அதிக ஒலி எழுப் பும், தொர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப் பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்க ளில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவ ளியை கொண்டாட வேண்டும் என மாசுக்கட் டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சேலத்தில் ஒலி அளவை யும், காற்று மாசு அளவையும் பதிவு செய்யும் வகையில் கொண்டலாம்பட்டி, மெய்யனூரில் கருவி பொருத்தப்பட்டுள் ளது. இதேபோல, சூரமங்கலம் சோனா கல்லூரியிலும் காற்றின் மாசு அளவை பதிவுசெய்யும் கருவி பொருத்தப்பட்டுள் ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின் பும், ஒலி, காற்று மாசு பதிவு செய்யப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரி வித்தனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
தருமபுரி, அக்.19- தீபாவளி பண்டிகையையொட்டி, கிரா மப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதி அடர்ந்த மலைகள் சூழ்ந்த 50க்கும் மேற் பட்ட கிராமங்களை கொண்டதாகும். இப் பகுதியில் போதுமான தொழிற்சாலை, வேலைவாய்ப்பு இல்லாததால், இளை ஞர்கள் உள்ளிட்டோர் வேலைதேடி கர்நாட கம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். பொங்கல், தீபாவளி மற்றும் தொடர் விடு முறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவது வழக்கம். பென்னாகரம் பகுதியிலிருந்து ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, ஏரியூர், பெரும்பாலை உள் ளிட்ட மலைக்கிராமப் பகுதிகளுக்கு இரவு 9 மணிவரை மட்டுமே பென்னாகரம் பணி மனையில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை யையொட்டி, சொந்த ஊருக்கு வருவோர் இரவு நேரங்களில் தங்கள் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோ, சிறிய அளவிலான கனரக வாகனம் ஆகிய வற்றில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. சிலர் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் இரவு முழுவதும் பென்னாகரம், தருமபுரி பேருந்து நிலையங்களிலேயே தங்கி, அதிகாலை யில் தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்தின் மூலம் செல்கின்றனர். எனவே, பென்னாகரம் பகுதிகளிலுள்ள மலைக்கிராமப் பகுதிக ளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.