சட்டப் படிப்புக்கு கால அவகாசம்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்று விக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி, மூன்றாண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) சட்டப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் பதிவிற்கான கால அவகாசம் ஜூலை 25ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்க வேண்டும்.
பதவி உயர்வு
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறி விப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை அமைப்பு (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரிய ருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 34 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணி யிடங்களும் நிரம்பியுள்ளன. 25 மாவட்ட கல்வி அலுவ லர்கள் பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட காலி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ஒட்டு கேட்கும் கருவி
சென்னை: “லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்டும் கருவி என் நாற்காலிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கிறது. இதை புதன்கிழமை (ஜூலை 9) தான் கண்டுப்பிடித்தோம். இங்கு வைத்தது யார் என்று விசா ரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று பாமக நிறுவனர் மரு.ராம தாஸ் தெரிவித்திருக்கிறார்.
நீலகிரி, கோவையில் கனமழை
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜூலை 15 முதல் 17 வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இளையராஜா அவசர முறையீடு
சென்னை: “வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெளியாகியுள்ள திரைப் படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மைக்கேல் மதன காமராஜனில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடலை ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் அனு மதியில்லாமல் பயன்படுத்தி உள்ளனர்” என்று இசைய மைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.'
கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு
ஜோலார்பேட்டை: கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளி விட்ட கொடூர சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்தது. கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ப வரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்த இவர் கோவை-திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 6 பெண்களும் இறங்கிய பிறகு, பெட்டியில் ஒரு நபர் ஏறி னார். ரயில் புறப்பட்ட உடனே அந்த இளைஞர் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். உதவிக்காக கூச்சலிட்டபோது, அவர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் கரு கலைந்தது. கைது செய்யப்பட்ட ஹேமந்த்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டான். திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசார ணையில் 28 வயதான ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதி பதி அறிவித்துள்ளார். குற்றத்திற்கான தண்டனை ஜூலை 14 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை
சென்னை, ஜூலை 11 - பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்ப லூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒன்றிய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்து வருகின்றனர். ஜூலை 26 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஜூலை 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான வாகனங்கள் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 11- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அந்த வாகனங்களுக் கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யால் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும், கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும், துறை அலு வலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப் படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த வாகனங்கள் கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறி யாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன் பாட்டிற்காக 109 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பில் 1018 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முரு கானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன் னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிபா வைரஸ்: தீவிர கண்காணிப்பு
சென்னை: நிபா வைரஸ் பரவலை அடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் 20 வழிகளிலும் சுகா தாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்ய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறி வுறுத்தியுள்ளார்.
ஜூலை 14-இல் முதலமைச்சர் சிதம்பரம் பயணம்
சென்னை, ஜூலை 11- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 14 ஆம் தேதி மாலை சென்னை எழும்பூரிலிருந்து இராமேஸ்வரம் விரைவு ரயிலில் சிதம்பரம் செல்ல வுள்ளார். ஜூலை 15ஆம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முதல் முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடைக்கோடி மக்க ளுக்கும் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கு வது இத்திட்டத்தின் நோக்கமாகும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் களப்பணிகள் ஆய்வு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடி வுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். பின்னர் ஜூலை 16 ஆம் தேதி சோழன் விரைவு ரயிலில் சென்னை திரும்புவார்.