tamilnadu

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்...

காலமானார்

மதுரை:
காப்பீட்டுக் கழகஊழியர் சங்க மதுரைக்கோட்டத் தலைவர் ஜி. மீனாட்சிசுந்தரத்தின்  தந்தை எஸ்.என்.குருசாமி (87) உடல் நலக்குறைவு காரணமாக வியாழன்  மாலை மதுரை வண்டியூரில் காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்,  காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், சிஐடியு,  வாலிபர் சங்கம், மாதர் சங்கம்,  மாணவர் சங்கம் உள்ளிட்டபல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.

                           **********************

ஏ.காந்தி காலமானார்

மதுரை:
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.காந்தி(60) உடல்நலக்குறைவால் காலமானார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் அலுவலகச் செயலாளர் ஏ.நேரு-வின் சகோதரர் ஏ.காந்தி (60) உடல் நலக்குறைவு காரணமாக வியாழனன்று காலமானார்அன்னாரது உடலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் என் நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தா. செல்லக்கண்ணு, வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறுஅமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகிகள்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வியாழனன்று மாலை நடைபெற்றது.

                           **********************

இழப்பீடு வழங்கக் கோரிக்கை

 திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் பகுதியில் மேலதொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம், பூவாணி, குன்னூர், வளையபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய பயிர் திருக்கல் நோயால் பாதிக்கபட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.70,ஆயிரம்- வரை செலவழித்து பயிரிட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

                           **********************

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் :தடை கோரி நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை:
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுர்வேத-யுனானி-ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ மேற்படிப்புப் பயின்றுஅறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும்மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள்  இன்று (சனி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்..கொரோனா தொற்றுக்  காலத்தில்இது போன்ற மருத்துவர்களின் அறிவிப்பால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க  வேண்டுமென வழக்கறிஞர்கள் நீலமேகம், முஹமது ரஸ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் முறையிட்டனர். முறையீட்டை மனுவாக தாக்கல்செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

                           **********************

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி

மதுரை:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழு சார்பில்பேரணி நடைபெற்றது. ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணியை அண்ணா மெயின் வீதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்து நிறுத்தினர். பகுதிக்குழுச் செயலாளர் குரோனி செந்தில்தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.செல்வா, மா.பாலசுப்பிரமணியம், பகுதிக்குழுத் தலைவர் சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம், வெங்கடேஷ், அருண் பகுதிக் குழு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.