tamilnadu

img

மோடி அரசுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரல்

மோடி அரசுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரல்

தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக்கோரி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, விவசாய இடுபொருட்கள், மற்றும்  விவசாய இயந்திரங்கள் ஆகிய அத்தியாவசிய சரக்குகள் மீது ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் - சாலை மற்றும் ரயில் மறியல் நடைபெற்றது.