tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

சாலையில் திரியும் கால்நடைகளால் அவதி பாபநாசம்,

ஜூலை 6 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழ கத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. பாப நாசம் அருகே அய்யம்பேட்டையில் மதகடி பஜார், சாவடி  பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்தச் சாலை யில் இரவு நேரத்தில் மாடுகள் போக்குவரத்திற்கு இடை யூறாக சாலையில் நிற்கின்றன. சாலையோரம் படுத்துக்  கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. மாடுகளை சாலைகளில் மேயவிடும் மாடு  வளர்ப்போர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.  சாலைக் கடக்க முயன்றவர் கார் மோதி பலி புதுக்கோட்டை, ஜூலை 6 - புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மங்களத்துப் பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமராஜ் (34). இவர், பொம்மாடிமலைப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில்  வேலை பார்த்து வந்துள்ளார். சனிக்கிழமை காலை உணவகத்துக்குத் தேவையான  பொருட்களை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில்  வந்த இவர், குளத்தூர் பிரிவு சாலையில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியிலிருந்து புதுக் கோட்டை நோக்கிச் சென்ற கார் ஒன்று இவர் மீது  மோதியது. இந்த விபத்தில், ராமராஜ் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராமராஜின்  உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதி யைச் சேர்ந்த கரண் (25) என்பவரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது அரியலூர், ஜூலை 6 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே யுள்ள வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (34). இவர், 4 வயது சிறுமியிடம் பாலியல்  சீண்டலில் ஈடுபட்டது குறித்த புகாரின் பேரில், ஜெயங்கொண் டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை அண்மையில் கைது கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில்,  ஆட்சியர் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை உத்தரவிட்டதை யடுத்து, தமிழ்ச்செல்வனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்  கீழ் காவல்துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர். போதைப் பொருட்கள் கடத்திய 2 பேர் கைது பாபநாசம், ஜுலை 6 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட அண்டக்குடியில் கபிஸ்தலம்  காவல் ஆய்வாளர் மஹாலட்சுமி, உதவி ஆய்வாளர் சசி குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற ஆம்னி  வேனை போலீசார் நிறுத்திக் கூறியபோது, நிற்காமல் சென்றதால், அதை துரத்தினர். அப்போது ஆம்னியை ஓட்டிச் சென்ற பாபநாசம் உத்தாணி புது தெருவைச் சேர்ந்த  சதீஸ்குமார் (31) வேனை அலவந்திபுரம் பேருந்து நிறுத்தம்  அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தினார்.  அவரை போலீசார் வளைத்து பிடித்தப் போது ஆம்னி  வேனில் 105 கிலோ ஹான்ஸ், 44 கிலோ விமல் பாக்கு  என மொத்தம் 149 கிலோ போதைப் பொருட்கள் இருந்த தும், அதை சதீஸ்குமார் கடத்தியதும் தெரியவந்தது. அதே  வேனில் இருந்த உத்தாணியைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், குட்கா பொருட் கள், குட்கா கடத்தலுக்கு பயன்பட்ட ஆம்னி வேன் பறி முதல் செய்யப்பட்டது.