tamilnadu

img

விவசாயம் காப்பதே முதன்மையான வார்க்கப் போராட்டம்

விவசாயம் காப்பதே முதன்மையான வார்க்கப் போராட்டம்!

தஞ்சாவூரில் அக்டோபர் 17 அன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் ஸ்தாபகத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு மூன்றாம் ஆண்டு சொற்பொழிவு நிகழ்வில், “பெருகி வரும் விவசாய நெருக்கடியும், விவசாயி களின் வாழ் நிலையும்” என்ற தலைப்பில் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் ஆற்றிய உரையின் தமிழ்ச் சுருக்கம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புதிதாக விதித்துள்ள சி-கேட்டகரி வரி விதிப்பு, இந்திய விவசாயத்தில் எந்த மாதிரி யான பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயி கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மகா ராஷ்டிராவின் விதர்பா மாவட்ட விவசாயி களுடன் உரையாடியபோது, இந்த வரி விதிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. அமெரிக்க வரிவிதிப்புக் காரணமாக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 500 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தி யப் பொருளாதார நிபுணர்கள் கணித்ததை விட 7 மடங்கு அதிகம். இந்த ஒற்றைச் சிக்கல், கடந்த 25 ஆண்டுகளாக விவசாயத் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. விவசாய வருவாயில் வீழ்ச்சி: துயரமான ஒப்பீடு இந்திய விவசாயிகளின் வருவாய் எவ்வளவு மோசமாகக் குறைந்துள்ளது என்பதற்கு மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டப் பருத்தி விவசாயிகள் குறித்த உதார ணத்தைக் கூற முடியும். 1950-70களில் ஒரு குவிண்டால் பருத்தியை விற்றால் 12 கிராம் தங்கம் வாங்க முடிந்தது. ஆனால், இன்று 10 கிராம் தங்கம் வாங்க (விலை ₹1,24,000-ஐ எட்டியுள்ள நிலையில்) 15  முதல் 20 குவிண்டால் பருத்தியை விற்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்குப் பருத்தியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்குப் பின்னால், அமெரிக்க வரிவிதிப்பு பருத்தியை மூலப்பொருளாகக் கொண்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்  உற்பத்தியின் மீது 50% ஆக அதிகரித்ததே பிரதான காரணம். அதேபோல், தோல் பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சா லைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். மோடி அரசின் விவசாய  விரோத அணுகுமுறை ஒருபுறம் பிரதமர் மோடி அமெரிக்கா வுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறிக் கொண்டாலும், மறுபுறம் அவர் மீண்டும் மீண்டும் வரிவிதிப்புக்கு இடம் கொடுப்பதன் மூலம் விவசாயிகள் மேலும் நலிவடைந்து வருகின்றனர். பருத்திக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை (MSP) குவிண்டாலுக்கு ₹8,170 ஆக இருந்தும், விவசாயிகளுக்கு ₹6,500-க்கு மேல் விலை கிடைப்பதில்லை. இந்தச் சூழலிலும் ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியப் பருத்தி விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏமாற்ற ப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறி யாமலே விவசாயிகள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். சோயா பீன்ஸ் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களின் நெருக்கடி பருத்தியில் நட்டமடைந்த விவசாயிகள் மாறிய சோயா பீன்ஸ் உற்பத்தியும் இப்போது சிக்கலைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால், சீனா அமெரிக்கா விலிருந்து சோயா பீன்ஸ் இறக்குமதியை நிறுத்திவிட்டது. இதனால் அமெரிக்கச் சந்தை களில் தேங்கும் சோயா பீன்ஸ் இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரப்பட வாய்ப்புள் ளது. இது நம் நாட்டுச் சோயா பீன்ஸ் விவ சாயிகளைப் பாதிக்கும். தென்னிந்திய மாநிலங்களிலிருந்து ஏற்றுமதியாகும் கடல்சார் உணவுப் பொருட் களின் மீதும் அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. ஆந்திரக் கடற்கரையில் உள்ள 80% இறால் பண்ணைகள் மூடப்படும்  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வரி விதிப்பை தாங்க முடியாமல் தொழிலை நிரந்தரமாக மூடிவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்லப்  போவதாக விவசாயிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் இந்தியக் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 43% குறைந்துள்ளது. இந்திய ஆட்சியாளர்கள் விவசாயிகளின் நலன்களைப் புறந்தள்ளிவிட்டு, இருதரப்பு ஒப்பந்தங்களில் நாட்டின் நலன்களைப் பின்னுக்குத் தள்ளி, கனரக, மருந்து நிறு வனங்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர் களுக்காகவே செயல்படுகின்றனர். விவசாயிகளின் போராட்டமும், கார்ப்பரேட் ஆதிக்கமும் அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராகச் சீனா, பிரேசில் போன்ற நாடுகள் பதில் வரி  விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு, தங்கள் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கின்றன. பிரேசில் 600 கோடி டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இதி லிருந்து நாம் கற்றுக்கொண்டு, அமெரிக்க வரிவிதிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளைக் காக்கப் பதிலடி வரி விதிப்பைச் செயல்படுத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் உலக நாடு களில் நடைபெறாத ஒரு போராட்டம் என்றால், அது தில்லியில் விவசாயிகள் நடத்திய  முற்றுகைப் போராட்டம் தான். 54 வாரங்கள் போராடி, ஏராளமான உயிர் தியாகங்களுக்கு பிறகு, 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் அரசை நிர்ப்பந்தித்துத் திரும்பப் பெற வைத்த பெருமை இந்திய விவசாயிகளுக்கு உள்ளது. 1991ஆம் ஆண்டின் புதிய பொருளா தாரக் கொள்கையின் முக்கிய நோக்கம், விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளி யேற்றுவதுதான். அரசின் புள்ளிவிவரப்படி, இதுவரை 5 கோடி விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறிச் சென்றுவிட்டனர். இது இந்தியாவில் மட்டுமல்ல; பிற நாடுகளிலும் நடக்கிறது. ஐரோப்பிய யூனியனில் 10 ஆண்டுகளில் 3.5 லட்சம் பண்ணைகள் கார்ப்பரேட்டுகளுக்குச் சென்றுவிட்டன. இந்தியாவில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது, விவ சாயத்தையும் கார்ப்பரேட் மயமாக்கும் அபா யத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் விவ சாயத்திற்கு எதிரான இந்தப் போராட்டமே, இந்தியாவின் முதன்மையான வர்க்கப் போராட்டமாக இருக்கும். நாம் விவசாயிகளை மட்டும் காப்பாற்றப் போராடவில்லை. நம் கலாச்சாரத்தின் தாய்மடியான விவசாயத்தைப் பாதுகாக்கப் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழில் : என்.சிவகுரு தொகுப்பு: ஜகுபர் அலி