tamilnadu

img

சாதியத் தடைகளை உடைத்து சாதித்த அரசியல் கட்சி - அனுபவப் பகிர்வு:

அதேபகுதியில், வேறொரு சமூ கத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இவரது மனைவி பாண்டீஸ்வரி, இவரது மகள் மதுபாலா. ஊரும் சேரியும் வேறு வேறாக இருந்த போதிலும் காளீஸ்வ ரனும், மதுபாலாவும் ஒருவரை ஒரு வர் நேசித்தனர். ஒருநாள் காளீஸ்வரன் வீட்டிற்கு மதுபாலா வர, கலகம் துவங்கியது. மதுபாலாவை பார்த்ததும் படபடத்த காளீஸ்வரனின் தாயார் ஜோதி, ஓடோடி சென்று மதுபாலாவின் தாயி டம், அம்மா உங்க பொண்ணு, எங்க வீட்டுக்கு வந்துருச்சு.. வந்து கூட்டிட்டு போங்க.. எனக் கூறியுள்ளார். இதை யடுத்து, மதுபாலாவை அவரது தாயார் அழைத்தபோது வரமறுத்த தோடு நான் விரும்பியவரையே திரு மணம் செய்வேன் என உறுதியாகக் கூறினார்.  திரும்பச் சென்று தனது கணவர் கருப்பசாமியுடன் மதுபாலாவை அழைக்க வந்தனர். அப்போது கருப்பசாமி ஆவேசத்துடன் வந்து அரிவாளால் வெட்டினார். இதில், பழனி பலியானார்.  விரும்பி வந்த வீட்டிலிருந்து மது பாலாவை இழுத்துச் சென்றனர்.

பின்பு, தலித், அருந்ததியர் அமைப்புகளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டம் நடத்தி யதால், கருப்பசாமி, பாண்டீஸ்வரி மீது கொலை வழக்கும், வன்கொடுமை வழக்கும் பதிவு செய்து காவல் துறை சிறையில் அடைத்தது.  பெரும் குற்றம் செய்து பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திருத்தங்கல்லில் பாட்டி வீட்டில் காவல்துறையால் தங்க வைக்கப்பட் டார் மதுபாலா. தந்தையை இழந்த தவிப்பில் காளீஸ்வரன் குடும்பம். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஜனநாயக மாதர் சங்கமும் தவிப்பில் இருந்த காளீஸ்வரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அரவணைத் தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு நிவாரணம், அரசு வேலை, வீடு என்ற கோரிக்கைகளோடு அரசு அலு வலகங்களின் கதவு தட்டப்பட்டது. வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த வுடன் தரவேண்டிய நிவாரணத் தொகையில் பாதி கிடைத்தது. வீடு உறுதிசெய்யப்பட்டது. சம்பவங்கள் நடந்து 4 மாதங்கள் ஆன பின்பும் டிசம்பர் 7ஆம் தேதி பாட்டி வீட்டில் அடைபட்டுக் கிடந்த மதுபாலா, விருதுநகர் வந்து மாதர் சங்க தலைவர்களை சந்தித்து, தன்னை காளீஸ்வரனுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக் கோரினார்.

பெற்றோரின் மிரட்டல்கள், காவல்துறையினரின் பாரபட்சமான அணுகுமுறையை மீறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் பலகட்ட போராட் டத்தை நடத்தி, டிசம்பர் 8-ஆம் தேதி காளீஸ்வரன் குடும்ப உறுப்பினர் கள் முன்னிலையில் மாதர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.லட்சுமி தலை மையில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலசுப்பிரமணியன், காளீஸ்வரன்- மதுபாலா திரும ணத்தை நடத்தி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.முத்துக் குமார், மாதர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.தெய்வானை, மாவட்டத் தலைவர் என்.உமா மகேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், அ.குருசாமி, எல்.முரு கன், பி.பாண்டி, ஆர்.முத்துவேலு, எம்.ஜெயபாரத், சமயன், சமூக ஆர்வலர் எம்.ஊர்க்காவலன் ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர். மனித மனங்களில் மண்டிக் கிடக்கும் சாதி எனும் அழுக்கால் சமூ கத்தில் பல சீரழிவுகள் ஏற்படுகிறது. சாதி மதம் கடந்து ஏற்படும் காதலை வரவேற்பது மனித சமூகத்தின் கடமை. இந்த கடமையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண் டாமை ஒழிப்பு முன்னணியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சிறப்பாக செய்து வரு கிறது.

;