tamilnadu

விவசாயிக்கு மாற்று இடத்தில் மின் இணைப்பை வழங்க கோரிக்கை

  விவசாயிக்கு மாற்று இடத்தில்  மின் இணைப்பை  வழங்க கோரிக்கை

 திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரியை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும்  ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு சொந்தமான அனுப்பம்பட்டு,  சிறுவாக்கம் கிரா மத்தில் புல எண் 444 .5ஏ ல் 2.75 ஏக்கர்  விவசாய நிலம் உள்ளது. சென்னை வெளி வட்டச் சாலை விரிவாக்க பணிக்காக  அரசு  இந்த நிலத்தை கைய கப்படுத்தியது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு  அங்கு ஆழ்துளை கிணறு இருந்தது. அதில் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்தி வந்தனர். சாலை விரிவாக்க பணியின் போது கிணறு மற்றும் குழாய்கள் சேதமடைந் துள்ளதால், ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றை அமைத்துக்கொள்ள தற்போதுள்ள மின் இணைப்பை மாற்றித் தரு மாறு மீஞ்சூர் துணை  மின்வாரிய அலுவல கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித் தும் இதுவரை மாற்றித்தராமல் அலைகழிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சாலை நில எடுப்பு திட்ட அலுவலர் தலை யிட்டு  விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பை விரைந்து மாற்றி அமைத்துத்தர க்கோரி மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. உரிய  நடவடிக்கை எடுப்பதாக  அவர்களும் தெரிவித் துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத்,  மாவட்டப் பொரு ளாளர் சி.பெருமாள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர். ஸ்ரீகாந்த் மற்றும் ஆர்.ஸ்ரீநாத் ஆகியோர் மனு அளிக்கும்போது உடனிருந்தனர்.