tamilnadu

img

போட்டித் தேர்வு : நாமளும் ரீல்(ஸ்) விடலாமா..?

சார், சொல்லுங்க.. இங்க நெட்வொர்க் சரியா இல்ல.. இருங்க, வெளில வர்றேன்.. 
எல்லா நெட்வொர்க்லயும் இந்தப் பிரச்சனை இருக்கே... 
சார்.. இப்போ கேக்குதா..? 
கேக்குது.. கேக்குது... நாம இன்னிக்கு என்ன படிக்கப் போறோம்னு பேசிட்டு இருந்தோமே.. பாதில விட்டுட்டோம். அதான் கூப்புட்டேன்.
இப்போ படிக்க ஆரம்பிக்குறேன், சார்... நாம நாளைக்குப் பேசிக்கலாமா..? 6.30க்குள்ள முடிக்கனும்... இன்னும் 90 நிமிஷம்தான் இருக்கு..
அதென்ன 6.30..?
படம் ஆரம்பிச்சுரும் சார்... இன்னிக்கு டி.வி.ல எனக்குப் பிடிச்ச ‘கில்லி’ போடுறாங்க..  
ஓகே... ஓகே..
சார்.. சார்.. என்ன, உங்க குரல் சரியில்லையே..? வேற மாதிரி இருக்கு. படிக்குறப்ப சினிமா பாக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா..?
இல்ல.. அப்புடிலாம் இல்ல. அப்புறமா பேசலாம்..
பரவாயில்ல.. சொல்லுங்க..
இப்போ, நாளைக்கு ஊருக்குக் கிளம்புனம்னா, என்ன பண்ணிட்டு இருப்பீங்க...
துணிலாம் எடுத்துக் வைக்கனும்.. டிக்கெட் சரியா இருக்கானு பாக்கனும்... ஏதாவது வண்டில போறதா இருந்தா, அது இருக்கா, இல்லையான்னு பாத்து வெச்சுக்கனும்.. கூட வர்ற மத்தவங்ககிட்ட நினைவுபடுத்தனும்.. சாப்பாடு என்ன ஏற்பாடுனு கேட்டுக்கனும்... இப்புடி நிறைய வேலைகள் இருக்குதே... இப்பருந்தே இதே நினைவாத்தான் இருப்பேன்..
எல்லாருமே அப்புடித்தான் இருப்போம்...  90 நிமிஷத்துக்குள்ள படிச்சு முடிக்கனும்னு திட்டம் போடுறது, பிடிச்ச படத்தப் பாக்குறதுக்குதான..
ஓ... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிய ஆரம்பிச்சுருச்சு...
ஆமா...  இப்போ படிக்க உக்கார்றீங்கன்னா என்ன இலக்கு..? 6.30க்குள் முடிக்கனும்.. எதுக்கான முடிக்கனும்.. சினிமா ஆரம்பிச்சுரும்.. அதுக்குள்ள அம்மா ஏதாவது கேக்காம இருக்கனும்.. அம்மாகிட்டயே போய் ஏதாவது வேணுமாம்மா.. சினிமா ஆரம்பிச்ச பிறகு தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்வோம்.. இந்த 90 நிமிஷத்துக்கான இலக்கா 6.30 மணிங்கறதுதான் இருக்கும்..
அப்போ சினிமா பாக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்க..
அப்புடி நான் சொல்லலியே... நம்ம கவனம் எதுல இருக்குங்குறதுதான் நான் சொல்ல வர்றது.. ஏற்கனவே நாம பேசிருக்கோம்... சினிமாவுல நாம என்ன எதிர்பார்க்குகிறோம்... நாலு சண்டை, அஞ்சு பாட்டு, பத்து ஜோக்கு... இல்லேனா சில பேரு மாதிரி நல்ல கருத்துனு பாக்கப் போறோம்ல... டி.என்.பி.எஸ்.சி.க்கு என்ன கிடைக்கும்னு போனாத்தான் என்னவாம்..?
அப்போ ரீல்ஸ் பாக்குறதுக்கும் இப்படித்தான் சொல்வீங்களா..?
ஆமா.. நேத்திக்கு ஒரு ரீல்ஸ் பாத்தேன்... மேடைல விஜய்கிட்ட சிவ கார்த்திகேயன் கேப்பாரு.. மூணு படத்துப் பெயரைச் சொல்லி, அதுல அவர் கூட நடிச்ச மூணு நாயகிகள் பெயரையும் சொல்லி, இந்த மூணு பேர்ல யார் உங்களுக்குப் பொருத்தமா இருந்தாங்கனு கேள்வியைப் போடுவாரு..
ஆமா.. இலியானா, அசின், ஹன்சிகாதான் அந்த மூணு பேரு.. அதுக்கு ஹன்சிகாதான்னு விஜய் சொல்வாரு..
அட.. என்ன நினைவுசக்தி உனக்கு.. 
பின்ன.. அது மட்டுமா... சிவகார்த்திகேயன் விட மாட்டாரு... கூட்டத்துல விஜய்யோட துணைவியார் இருப்பாங்க... அவங்க எழுப்பி, விஜய் கூட யார் நடிச்சா பொருத்தமா இருப்பாங்கனு கேப்பாரு.. அவங்க ஜெனிலியானு சொல்லிருவாங்க..
ஆமா.. ஆமா.. 
என்ன நீங்க ஹன்சிகானு சொல்றீங்க... அவங்க ஜெனிலியான்னு சொல்றாங்களேனு கேக்குறப்ப, என்கிட்ட மூணுல ஒண்ணு சொல்லச் சொன்னீங்கள்லனு சொல்வாரு..
அதேதான்... இங்கதான் நம்ம பாடம் வருது... தேர்வுலயும் இதேமாதிரிதான்..  சிறுபஞ்சமூலத்தோட தொடர்புடைய மருத்துவச் செடி கேட்டுருப்பாங்க...  ஏலம், மிளகு, நாககேசுரம், நெருஞ்சினு கொடுத்துருப்பாங்க.. கண்டங்கத்திரி, சிறுமல்லி, பெருமல்லிலாம் சிறுபஞ்சமூத்தோட தொடர்புடையதுன்னு தெரியும். இதுலாம் விடைகள்ல இல்லயே... சரி, நமக்குத் தெரிஞ்சதப் போடுவோம் என்று போட முடியுமா..? கொள்குறிவகை வினாக்களைக் கொண்டு நடத்தப்படும் தேர்வில் அப்படிச் செய்ய முடியாதல்லவா..?
இந்த ரீல்ஸப் பாக்குறப்ப நமக்கு இது நினைவுக்கு வரனும்.. அப்படித்தான சார்.. நீங்க விடையச் சொல்லலியே..
நெருஞ்சிதான்.. ஏலம், நாககேசுரம் ரெண்டும் ஏலாதி.. மிளகு திரிகடுகம்.. இப்போ நாம அடுத்த ரீல்ஸப் பாக்கப் போகலாம்..
நீங்க சொல்றது சரிதான்... ரீல்ஸ் பாக்குறப்ப கூட முழுசா அதுல மட்டும் நம்மளோட கவனம் இருக்குறதில்ல.. எதை, எதையோ நினைச்சுக்குறோம். அதுக்கு இந்த மாதிரி பாடத்தையும் சேத்து நினைச்சுக்கலாமே.. சார்.. ஒண்ணு கேக்கலாமா..?
என்ன..?
இல்ல.. படிக்குறப்ப நோட்ஸ் எடுக்குறோம்.. டெஸ்ட் எழுதிப் பாக்குறோம்... படிச்சத ஒவ்வொரு நாளும் ரீல்ஸாப் போட்டா எப்புடி இருக்கும்...?
நல்லாதான் இருக்கும்... நெறயப் பேரு ஸ்டேடஸ் வெக்குறாங்க... தன்னோட படங்கள வெக்குறதுக்குப் பதிலா தலைவர்கள், காடுகள், ஏரிகள், மன்னர்கள், பூமிப்பந்துனு பல படங்கள வெச்சுக்குறாங்களே... நாமளும் பல முறை அதப் பாப்போம்ல..
ஆமா.. நாம வெக்குறத எத்தனை பேரு பாத்துருக்காங்கனு அடிக்கடி பாத்துட்டே இருப்போம்.. 
சார்.. அன்னிக்கு ஒருநாள் அப்புடித்தான் வெச்சேன்... ரெண்டு பேரு உடனே ஃபோன் பண்ணிட்டாங்க... காலைல பாக்குறப்ப கூட நல்லாத்தான இருந்தனு கலாய்ச்சுட்டுத் தள்ளிட்டாங்க..
பரவாயில்ல... அவங்களும் ரெண்டு வினாவுக்கு விடை தெரிஞ்சுக்கிட்டாங்கள்ல..
ஆமா சார்... அதான் ரீல்ஸ் போட்டா என்னனு தோணிச்சு.. ரொம்ப நேரம் ஆகாது.. 
போடலாம்... ஆனா, இன்னிக்கு என்ன போடலாம்.. நாளைக்கு என்ன போடலாம்னு நெனக்குறப்ப, பாடம், சுவாரஸ்யம்னு யோசிக்கனும்... எவ்வளவு பேரு பாக்குறாங்கனு மட்டும் யோசிச்சுரக்கூடாது..
கவனமா இருப்பேன்.. இன்னிக்கு ஒரு வீடியோ பாத்தேன்.. ஒரு அம்மா, தனக்கு 23 வருஷ குடும்ப வாழ்க்கைல 24 குழந்தைகள் பிறந்துருக்குனு சொல்லுது..
ஓ... இது எப்புடி நீ ரீல்ஸாப் போடுவ... அது ஏற்கெனவே ரீல்ஸாத்தான இருக்கு..
அந்தப் படத்த மட்டும் போட்டு, நாம பேசலாம்னு நினைக்குறேன்... அவங்க என்ன சொல்றாங்கனு 30 விநாடி... அதாவது, எப்புடி 23 வருஷத்துல 24 குழந்தைகள்னு கேக்குறப்ப, சில பிரசவத்துல ரெட்டைக் குழந்தைகள்னு சொல்லுது.. பெரிய குழந்தைகள், சின்னக்குழந்தைகளப் பாத்துக்குதுங்க... இப்புடியெல்லாம் சொல்றாங்கன்னு சொல்லிட்டு, எனக்கு ஷாஜகான் துணைவி மும்தாஜ்தான் நினைவுக்கு வர்றாங்க... தேசிய மக்கள் தொகை பத்தி நினைவுபடுத்துது... இப்புடிப் பேசலாம்னு இருக்கேன்..
இனிமே அடிக்கடி ரீல்ஸ் பாக்கலாம்.. 
சார்... நீங்களும் போடுங்களேன்... வீடியோ போட்டுத்தான் எங்களப் படிக்க வெக்கனுமா.. ரீல்ஸ், ஷார்ட்ஸ் போட்டும் சொல்லிக் கொடுக்கலாமே...
சரி.. படம் பாத்துட்டு படிக்க ஆரம்பி..
படம் பாக்கல... அத இன்னும் பல முறை போடுவாங்க..  அப்ப பாத்துக்கலாம்.. இப்போ படிச்சுட்டு ஒரு ரீல்ஸ் போட்டுரனும்.. 
ஓகே... ரீல்ஸ் பாத்துட்டுப் பேசுறேன்..