சேலம், அக்.9- தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் 9 ஆவது மாநில மாநாடு சேலம் திருவாக்கவுண்டனூர் அருகே தோழர் சி.கோவிந் தன் நினைவரங்கில் (ஜீவிஎன் மண்டபம்) ஞாயி றன்று எழுச்சியுடன் துவங்கியது. முன்னதாக, சேலம் அரியா கவுண்டம்பட்டி பகுதியிலிருந்து சேலம் சிறை தியாகி ஆறுமுகம் நினைவு ஜோதி சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.ஆறுமுகம் தலைமையில் எடுத்து வரப்பட்டது. ஜோதியை சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார் எடுத்துக் கொடுத்தார். சம்மேளன துணைச் செயலாளர் மா.கணேசன் ஜோதியை பெற்றுக்கொண்டார். சேலம் ஜங்ஷன் கூட்செட்டிலிருந்து எம்.சீரங்கன் நினைவு ஜோதியை நிர்வாகிகள் என்.முனுசாமி, வி.சங்கர் தலைமையில் எடுத்துவரப்பட்டது. ஜோதியை சம்மேளன உதவித்தலைவர் த.முருகேசன் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டு கொடியை சுமைப்பணி சங்க விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.பழனி தலை மையில், விழுப்புரத்திலிருந்து எடுத்து வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்மேளன உதவித்தலை வர் எம்.ராஜகோபால் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சம்மேளன தலைவர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் பி. பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை சம்மேளன உதவித்தலை வர் பி.குமார் முன்மொழிந்தார். மாநாட்டை சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடாபதி, வரவு - செலவு அறிக்கையை சம்மேளன பொருளாளர் ஆர்.அருள்குமார் ஆகி யோர் முன்வைத்தனர். செஞ்சட்டை பேரணி முன்னதாக, சுமைப்பணி தொழிலாளர் களின் செஞ்சட்டை பேரணி சேலம் ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பி ருந்து துவங்கிது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை துவக்கி வைத்தார்.