சேலம், டிச.11- சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டி யில் நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்” ஆகிய புதிய திட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.38.53 கோடி மதிப்பீட்டிலான 83 முடி வுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.54.01 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களையும் முதலமைச்சர் வழங்கினார். பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சேலம் மாவட்டத்திற்கு ரூ.1242 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்க உள்ளேன். சேலம் அம்மாபேட்டையில் ரூ.120 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மக்க ளின் கோரிக்கைகள் விரைவாக நிறை வேற்றப்பட்டு வருகின்றன.சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றார்.