விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது அதிமுக ஆட்சி
பெருந்துறை அரசு விழாவில் முதலமைச்சர் கடும் தாக்கு
ஈரோடு, ஜூன் 11 - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அள விலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட் டம், பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே இரண்டு நாட்கள் நடக்கிறது. இதனைத் தொடங்கி வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின், புத னன்று (ஜூன் 11) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் அமைச்சர் சு. முத்துசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலை மையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து, அங்கு அரசு மற்றும் தனியார் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த 218 அரங்கு களை முதல்வர் பார்வையிட்டார். ரூ. 159.52 கோடி மதிப்பிலான 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 15.70 கோடி மதிப்பி லான 16 முடிவுற்ற திட்டப் பணி களை தொடங்கி வைத்தும், 4,533 பயனாளிகளுக்கு ரூ. 26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முத லமைச்சர், “இந்தியாவின் மஞ்சள் நகரமாக திகழ்வது ஈரோடு. வேளாண் வளர்ச்சியில் தமிழக அளவில் 8-ஆவது இடத்தில் உள்ளது” என்றார். “கடந்த 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெ.டன் என்ற அளவை எட்டியுள் ளோம். தோளில் பச்சைத் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. பயிர்களுக்கு இடையே களைகள் முளைக்கும் என்பது விவசாயி களுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட களையாகத் தான் அதிமுக ஆட்சி இருந்தது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து அனைத்து வகையிலும் விவசாயி களுக்கு துரோகம் செய்த ஆட்சி தான் அதிமுக” என்றும் கடுமை யாக சாடினார். அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வ ராஜ், எஸ். ராஜேந்திரன், மக்கள வை உறுப்பினர்கள் சுப்பராயன், பிரகாஷ், மாநிலங்களவை உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், வி.சி. சந்திரகுமார், ஏ.ஜி. வெங்காடச்சலம், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.