ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் தமிழ ரசன் 49.09 நொடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் 48.64 நொடிகளில் கத்தார் வீரரும், 48.96 நொடிகளில் ஜப்பான் வீரரும், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
தொடர் ஓட்டத்தில் தங்கம்
கலப்பு தொடர் ஓட்டம் பிரிவு ஓட்டத்தில் (4*400) ராஜேஷ், ஐஸ்வர்யா, அமோஜ், சுபா அடங்கிய இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ராஜேஷ், சுபா தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.