கோவையில் திடீர் மழை வெப்பம் தணிந்து குளுகுளு சூழல்
கோவை, அக்.11- கோவை மாவட்டத்தில் திடீர் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு இதமான சூழல் ஏற்பட் டது. தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ டுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந் தது. குறிப்பாக, பகல் நேரங்களில் வெப்பத்தின் காரண மாகப் பொதுமக்கள் வெளியில் செல்லச் சிரமப்பட்ட னர். இந்நிலையில், சனியன்று காலை முதல் வழக்கம் போல் வெயில் நிலவியது. ஆனால், பிற்பகல் நேரத்தில் வானத்தில் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை நகரின் மையப் பகுதி களான காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி மற்றும் புறநகர்ப் பகுதிகளான சூலூர், துடியலூர், பொள் ளாச்சி உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால், வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந் தனர். குறிப்பாக, புறநகர் பகுதிகளில் பெய்த மழை யால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் மக்காச் சோளம், காய்கறிகள் மற்றும் பிற விவசாயப் பயிர்க ளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவ சாயிகள் தெரிவித்தனர்.
மாபெரும் பனை விதை நடவுத் திட்டம் நாமக்கல்லில் 6 கோடி இலக்கு!
நாமக்கல், அக்.11- மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழுமமும், தமிழ் நாடு அரசும் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் 6 கோடி பனை விதைகள் நடும் பிரம்மாண்ட திட்டத்தை செயல்ப டுத்தி வருகின்றன. இந்த மாபெரும் பணியின் ஒரு பகுதியாக, குமாரபாளையம் அருகே உள்ள வல்வில் ஓரி நண்பர்கள் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீவி ரமாகப் பனை விதைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடு பட்டனர். இந்தத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில் வெள்ளியன்று நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு குமாரபாளையத்தில் ஒரு கோடி பனை விதை கள் நட்டு சாதனை படைத்த விவசாயி விஸ்வநாதன் பேசு கையில், “ஆண்டுக்கு 10 லட்சம் பனை விதைகள் தர வேண்டும் என்பதே எனது இலக்கு. தற்போது பல ஊர்க ளில் இருந்து மக்கள் வாங்கிச் செல்லும்படி ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக வழங்கி வருகிறேன்.” “பனை விதைகளை முறையாகச் சேகரித்து வைக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்க அரசு உதவ வேண் டும்.” “பூச்செடிகளுக்கு இருப்பது போல, பனை விதைக ளுக்கென தனியான நாற்றங்கால் (நர்சரி கார்டன்) அமைக்கலாம். பாலிதீன் பைகளில் மண் நிரப்பி அதில் பனை விதைகளைச் சேமித்து வைத்தால், முளை விட்ட நாற்றுகளை எளிதாக எடுத்துச் சென்று நடு வதற்கு உதவியாக இருக்கும்.” “பனை சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பதற் கான உரிய பயிற்சியை அரசு கொடுத்து ஊக்குவித் தால், அவற்றை பல வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், பனையின் பெருமை உலகெங்கும் பர வச் செய்யவும் முடியும்,” என்று கோரிக்கை வைத் தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
உதகை, அக்.11- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10 ஆஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறு மியை, பெற்றோர் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த னர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குன்னூா் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் வீட் டின் அருகே வசித்து வந்த பிரவீன் (35) என்ப வர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட் டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2022 ஆம் ஆண்டு ஆக.1 ஆம் தேதி பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில் குமார், பிரவீனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
தருமபுரி, அக்.11- அரூர் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் வெள்ளி யன்று மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பாளையம், காட்டுக் கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள் ளன. இங்குள்ள மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து தீர்த்தமலை நெடுஞ்சாலை வருவதற்கு போது மான சாலை வசதிகள் இல்லை. இதனால், சாலை வசதி ஏற்ப டுத்தி தரவேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வெள்ளியன்று அரூர் - தீர்த்தமலை நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல், வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை வசதி ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டதை யேற்று மறியல் கைவிடப்பட்டது.
காவல் நிலையம் இடமாற்றம்
ஈரோடு, அக்.11- ஈரோடு மதுவிலக்கு காவல் நிலையம் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவ லக வளாகத்தில் ஈரோடு மதுவிலக்கு காவல் நிலையம் செயல் பட்டது. தற்போது, எஸ்பி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடங்கள், மரங்கள் அகற் றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த மதுவிலக்கு காவல் நிலை யத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பி அலுவலகத்தின் பின்புறம் சைபர் கிரைம் காவல் நிலையம் அருகே உள்ள அறை, மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, வெள்ளியன்று முதல் ஈரோடு மதுவிலக்கு காவல் நிலையம், எஸ்பி அலுவ லகம் பின்புறம் பகுதியில் செயல்பட துவங்கியது.