tamilnadu

img

திருச்சி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

திருச்சி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள்  செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு சார்பில், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தின் மைய மாவட்டமாக திருச்சி உள்ளதால் இதனை சுற்றி யுள்ள மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு, திருச்சி அரசு மருத்துவ மனையே சிறந்த தேர்வாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைக்கான புகலிடங்கள் அரசு மருத்துவமனையே ஆகும். மருத்துவ மனையின் செயல்பாடுகள் குறித்து, எங்களது கட்சியின் சார்பில் சில ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு விவரங் களை வெளியிட்டுள்ளோம்.  அதன் அடிப்படையில், திருச்சி  அரசு மருத்துவமனையில் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாததால் மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணி ஊழியர்கள் பற்றாக்குறை அதிக மாக உள்ளது. எனவே நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று ஷிப்டுகளில் பணியாற்றக் கூடிய வகையில் பணி யாளர்கள் இல்லாததால் நோயாளி களின் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மேலும், மருந்து தட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளும் உள்ளதாக அறி கிறோம். அடிப்படை வசதிகளில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது. குறிப்பாக குடி தண்ணீர், பயன்படுத் தும் நீருக்கான தட்டுப்பாடு பெரிய அள வில் உள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ள சூழல் மருத்துவமனையில் உள்ளது.  மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, உடனடியாக நோயாளிகளின் தேவை அறிந்து சிறப்பான மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட ஆவன செய்திட வேண்டும் என பொது மக்களிடம் லட்சக்கணக்கான கை யொப்பங்களைப் பெற்றுள்ளோம். உடனடியாக தீர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், திருச்சி அரசு மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தபோது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, கார்த்திகேயன், மணிமாறன், பகுதிச் செயலாளர் தர்மா, விஜயேந்திரன், ரபீக் அஹமது, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், ராமர், சுந்தர்ராஜ், கரு ணாநிதி, ஏழுமலை, மணிமாறன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வேலுச் சாமி, சரஸ்வதி, சேதுபதி ஆகியோர் உடனிருந்தனர்.