tamilnadu

அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு இன்று துவக்கம்

சென்னை, டிச. 17- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள கே.ஆர்.சங்கரன் நினைவரங்கில் (ராமலட்சுமி பாரடைஸ்) டிசம்பர் 18 சனிக்கிழமையன்று  காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்குகிறார். வரவேற்புக் குழு தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற்புரையாற்றுகிறார். முதல் நாள் மாநாட்டை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைக்கிறார். பொதுச்செயலாளர் ஆ.செல்வம் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் பொது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.