உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாபநாசம், செப். 18- தஞ்சாவூர் மாவட்டம் சாலிய மங்கலம் அருகே, தளவாய் பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பொது மக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்கள் நடவடிக்கைக்காக, உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் அம்மாப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், வேளாண் இணை இயக்குநர் ஸ்ரீ வித்யா, பாபநாசம் தாசில்தார் பழனிவேலு, மண்டல துணை தாசில்தார் பிராங்ளின், அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் மோகன், அம்மாப்பேட்டை பி.டி.ஓ வனரோஜா உட்பட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.