tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருத்துறைப்பூண்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருத்துறைப்பூண்டி, ஆக. 30- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 10,11 மற்றும் 12 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை தாட்கோ தலைவர் நா. இளையராஜா பார்வையிட்டார்.  நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், நகராட்சி ஆணையர், ஆய்வாளர், நகர் மன்ற உறுப்பினர் ராமயோகேஸ்வரி, ரகுராமன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.