தீபாவளி எதிரொலி: சென்னையில் இந்தாண்டும் காற்று, ஒலி மாசு அதிகரிப்பு
சென்னை, அக்.22- தீபாவளி பண்டிகை நாளில் சென்னையில் ஒலி மற்றும் காற்று மாசு கடந்தாண்டை விட நடப்பாண்டு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள் ளது. ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறு நாள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒலி மற்றும் காற்று மாசு குறித்து தரக்குறியீடு வெளியிட்டு வரு கிறது. அந்த வகையில் இம்முறையும் தரக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவு மற்றும் ஒலி மாசு அளவை கண்டறிய பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட தமிழ கத்தில் உள்ள பிரதான மாவட்டங்களில் காற்று மாசு 39 இடங்களிலும் மற்றும் ஒலி மாசு 34 இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை காற்று மாசு தீபாவளி நாளான அக்.20 அன்று, காலை 6 மணி முதல் மறுநாள் (அக், 21) காலை 6 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) குறைந்தபட்சமாக பெசன்ட் நகர் 190 (AQI மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத் தில் 332 வரை (மிக மோசமானஅளவு) என ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை பெசன்ட் நகர் 190 ( மிதமானது), தி.நகர் 273, திருவெற்றி யூர் 207, திருவல்லிக்கேணி 227, சௌகார்பேட்டை 260, (மோசமானது) நுங்கம்பாக்கம் 326, வளரசவாக்கம் 332 என (மிக மோசமானது) அளவில் காற்றின் தரகுறியீடு பதிவாகியுள்ளது. ஒலி மாசு இதே போல, தீபாவளி பண்டிகை யன்று சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் (மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை) குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெசன்ட் நகர், தி.நகர்,நுங்கம்பாக்கம், திரு வல்லிக்கேணி, திருவெற்றியூர், சௌ கார்பேட்டை, வளசரவாக்கம் ஒலி மாசு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கடந்த தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே வளசரவாக்கத்தில் 332 ஆக காற்றின் தரக் குறியீடு மிக மோசமான அளவாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த முறை குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்த நிலையில், இந்த முறை குறைந்த பட்சமே பெசன்ட் நகரில் 190 ஆக பதி வாகியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு அதி கரித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்ச அளவாக ஒலி மாசு சென்னை நுங்கம்பாக்கத்தில் 78.7 db என்ற அளவில் பதிவாகி இருந் தது. குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 62.8 dB(A), அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 88.4 dB(A) என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒலி மாசும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.