ஏ யெல்லோ பேர்ட் (A Yellow Bird) “சிங்கப்பூர் மாதிரி” என்ற ஒப்பீட்டை நாம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம். அதன் அழகை பார்க்கிற நமக்கு “அடடா” என்றுதான் மெச்சத் தோன்றுகிறது. ஆனால் சிங்கப்பூரின் அழ கையும், செல்வச் செழிப்பையும் நன்கு அறிந்திருக் கும் நாம் அதன் மறுபக்கத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஓர் உண்மையான மக்கள் எழுத்தாளன் என்பவன் அழகாகவும், எல்லாம் சரியாகவும் இருக்கி றது என்று காட்டப்படுகிற இந்த சமுதாயத்திற்கு நேர் எதிரான ஓர் அழகற்ற (அருவருப்பான?) சமுதாயம் இருப்பதை தன் எழுத்தில் பதிவு செய்கிறான். 1965இல் பிறந்த கே.ராஜகோபால் (சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட தமிழர்) பலவித வேலைகளை செய்து கொண்டிருந்தவர். கலை தாகம் கொண்டு நாடக இயக்கங்களில் பங்கேற்க துவங்கினார்.
பின்னர் 1995 முதல் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். 2016 இல் சிங்கப்பூர்-பிரெஞ்சு கூட்டு தயாரிப்பில் உருவான படம்தான் ஏ யெல்லோ பேர்ட். சிவா என்னும் தமிழ் இளைஞன் ஒரு பழைய குற்றத்திற்காக போலீசின் கண்காணிப்பு வலையத் திற்குள் இருக்கிறான். மனைவி விலகிப் போய்விட, தாயும் அவனை மதிப்பதில்லை. நிரந்தர வேலை யற்ற அவன் ஒரு வேலை கிடைத்து, கிடைக்கும் வருமானத்தில் மீண்டும் தாய், மனைவி, பிள்ளை என்ற குடும்பத்தை மீட்டுவிட முனைகிறான். அவனின் குற்றப் பின்னணி வேலை பெறுவதற்கு தடையாக இருக்கிறது. வேலையின்மையும், வறுமையும் அவனை வாட்டுகிறது. மனைவியும், தாயும் அவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
சட்டபூர்வமற்ற முறையில் சிங்கப்பூரில் குடியேறி வாழும் ஒரு சீனப் பெண்ணோடு நட்பு கிடைக்கிறது. அவளது பாலியல் தொழிலுக்கு சிவா உதவுகிறான். நகருக்கு ஒதுக்குப்புறத்தில் ரகசியமாக பாலியல் தொழில் நடக்கிறது. ஒருநாள் போலீஸ் வந்து அவர்களை அள்ளிப் போகிறது. நல்லவேளை, சிவா மாட்டிக் கொள்ளவில்லை. சிங்கார சிங்கப்பூரில் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை சமாளிக்க போரா டும் அடி மட்டத் தொழிலாளர்க ளின் நிலை, சட்ட விரோத குடியேறிகளின் நிலை என சிங்கப்பூரின் இன்னொரு பக்கம் நமக்கு அதிர்ச்சி தருகிறது ! 2016 கான் திரைப்பட விழா வில் திரையிடப்பட்ட பெருமை பெற்றது. சிங்கப்பூர் மக்கள் தொகையில் 7 விழுக்காடே தமி ழர்கள். ஒரு நாட்டின் சிறுபான்மை மக்களின் நிலையை கலையில் பதிவு செய்ததற்காக உலக சினிமா விமர்சகர்களின் பாராட் டையும் பெற்ற படம்