tamilnadu

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக அறிவித்து பணி வரன்முறை செய்திடுக! சிஐடியு மயிலாடுதுறை மாவட்ட மாநாடு கோரிக்கை

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் மாத ஊதியம்  ரூ.10 ஆயிரமாக அறிவித்து பணி வரன்முறை செய்திடுக! சிஐடியு மயிலாடுதுறை மாவட்ட மாநாடு கோரிக்கை

மயிலாடுதுறை, ஜூலை 27-   இந்திய தொழிற்சங்க மையத்தின் மயிலாடுதுறை மாவட்ட மாநாடு ராஜேஸ்வரி மண்டபம், தோழர் ஆர். ரவீந்திரன் நினைவரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.  மாநாட்டின் கொடி ஏற்றத்திற்குப் பிறகு, அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைச் செயலாளர் பி.ராமலிங்கம் வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜி. இளவரசன் வரவேற்றார். மாவட்ட தலைவர் எம். கலைச்செல்வன் தலைமையுரையாற்றினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி. தேவமணி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஸ்தாபன வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஆர். ராமானுஜம் முன் வைத்தார். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் அறிவித்து பணி வரன்முறை செய்திட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டை வாழ்த்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வ. பழனிவேலு ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ப.மாரியப்பன், நிதி காப்பாளராக ஆர்.ராமானுஜம், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக என். பாரதி மோகன், பி.ராமலிங்கம், சி.லதா, சி.விஆர். ஜீவானந்தம், எம்.சேகர், லூ.அந்தோணிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் உரையாற்றி னார். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ப.மாரியப்பன் நன்றி கூறினார்.