tamilnadu

img

வாச்சாத்தி வீரத் தாய்களுக்கு செவ்வணக்கம்!

வாச்சாத்தி வீரத் தாய்களுக்கு செவ்வணக்கம்!

தருமபுரி, ஆக.9 - “31 ஆண்டுகள் போராட்டம்! மூன்று தசாப்த காலம் நீதிக்காகக் காத்திருந்த வாச்சாத்தி வீரத் தாய்களின் கண்ணீர் இன்று வெற்றியின் சிரிப்பாக மாறி யிருக்கிறது!” என்று- வாச்சாத்தி வன் கொடுமை வழக்கில், செங்கொடி இயக்  கத்துடன் இணைந்து நீண்ட நெடிய  போராட்டம் நடத்தி, குற்றவாளி களுக்கு தண்டனை பெற்று தந்த வீரத்  தாய்களுக்கு அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே பாராட்டு தெரி வித்தார். 1992-ஆம் ஆண்டு ஜூன் 20, 21, 22  ஆகிய தேதிகள் வாச்சாத்தி கிராமத்தின் இருண்ட வரலாறாக பதிந்துள்ளது.  வனத்துறையினர், காவல்துறை மற்றும்  வருவாய்துறையைச் சேர்ந்த 269 நபர்கள், தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிரா மத்திற்குள் நுழைந்து, வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், 18 இளம்பெண்களை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

 ஆனால் வாச்சாத்தி வீரத் தாய்கள் மௌனமாக இருக்கவில்லை!  

இத்தகைய கொடுமையைக் கண்  டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி  கேட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு மலைவாழ் சங்கமும் நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்  திய பின், சிபிஐ (மத்திய புலனாய்வு  துறை) விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. 31 ஆண்டுகளுக்கு பின்,  சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி  மாவட்ட அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை ரத்து  செய்தது. பாலியல் வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ. 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்  களின் வாரிசுதாரர்களுக்கு தகுதியுள்ள  17 நபர்களுக்கு பணியாணை வழங் கப்பட்டது.

அசோக் தாவ்லேவுக்கு  உற்சாக வரவேற்பு

இந்நிலையில், நீண்ட நெடிய  போராட்டத்தில் மனத் துணிச்சலுடன் நின்ற வாச்சாத்தி கிராம வீரத் தாய்களை,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே  வெள்ளியன்று நேரில் சந்தித்தார். முன்னதாக, கிராமத்திற்கு வந்த தலைவர்களை, பழங்குடி மக்கள் முக் கனிகளை கொடுத்து வரவேற்றனர்.

செங்கொடியின் கீழ் ஒன்றுபடுவோம்

இதையடுத்து அசோக் தாவலே பேசு கையில், “வாச்சாத்தி ஒரு வரலாற்றுப் பூர்வமான கிராமம். இந்த வீரத் தாய்  களின் துணிவைக் கண்டு என் கண்கள்  கலங்குகின்றன. இவர்கள் வெறும் பெண்கள் மட்டுமல்ல - இவர்கள் போராட்டத்தின் சின்னங்கள், நீதி யின் முகங்கள்! இந்த வீரஞ்செறிந்த  போராட்டத்தை நடத்திய வீரத் தாய் களை பாராட்டுகிறேன்; செவ்வணக்கம் செலுத்துகிறேன். 31 ஆண்டுகள்  போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை  பெற்றுத் தந்துள்ளோம்; குற்றவாளி கள் சிறையில் உள்ளனர்; அதுமட்டு மல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்துள்ளோம்” என்  றார். “மக்களை மதம் மற்றும் சாதி ரீதி யாக பிரிக்கின்றனர். பழங்குடியினர் என்றும் தலித்துகள் என்றும், மொழி யின் அடிப்படையிலும் மக்களை பிரிக் கின்றனர். தமிழ்நாடு பகுத்தறிவை விதைத்த மண்; இந்த மண்ணில்  செங்கொடியின் கீழ் ஒன்றுபடுவோம். இப்பகுதியில் செங்கொடி இயக்கம் வலுப்பெற வேண்டும்” என்று அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் டி. ரவீந்திரன், மலைவாழ் மக்கள்  சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு,  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ. தனுசன், மலைவாழ் மக்கள் சங்க  மாநில துணைச்செயலாளர் கண்ணகி, மாவட்டச் செயலாளர் கே.என். மல்லை யன், தலைவர் அம்புரோஸ், விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் பி. பெரு மாள், மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுணன், பொருளாளர் சி. வஞ்சி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் இ.கே. முருகன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் வெங்கடேஷ், வாச்சாத்தி  கிராம தலைவர்கள் ரவி, சின்னத்துரை உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.