புதுக்கோட்டை, டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக எஸ்.கவிவர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 14-ஆவது மாநாடு திருமயத்தில் தோழர்கள் ப. சண்முகம், எம்.உடை யப்பன், எம்.முத்துராம லிங்கம் நினைவரங்கில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாநாட்டை தொட ங்கி வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பொன்னி வரவு-செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். மாநாட்டில் கலந்து கொண்டு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., உள்ளிட்டோர் தீர்மா னங்களை முன்மொழிந்து பேசினர். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் எஸ்.கவி வர்மன் மாவட்டச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக எம்.சின்னத் துரை, ஏ.ராமையன், எஸ். சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமண வாளன், கே.சண்முகம், என்.பொன்னி, ஜி.நாகராஜன், த. அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை உள்ளடக்கிய 41 மாவட்டக்குழு உறுப்பினர் களும், 16 மாநில மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும். தேசிய வேலை உறுதித் திட்ட த்தை நகர்ப்புறப் பகுதி களுக்கு முழுமையாக விரிவு படுத்துவதோடு கூலியை யும், வேலை நாட்களையும் அதிகப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். நெல்கொள் முதல்நிலையங்களை கூடுத லாக திறக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.