tamilnadu

img

தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் ரூ.45 கோடி இருப்பு

தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் ரூ.45 கோடி இருப்பு

வாரியத் தலைவர் தகவல்

வாரியத் தலைவர் தகவல் தஞ்சாவூர், ஜூலை 12 -  தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ரூ.45 கோடி  இருப்பு உள்ளது என்று வாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தாட்கோ  சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப்  பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் தெரிவிக்கையில், “தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2007 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இடையில் 10  ஆண்டுகளாக இந்த வாரியம் கிடப்பில் போடப் பட்டு, ஒரு பைசாகூட ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. மீண்டும் 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு  வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த  வாரியத்துக்கு தனி அலுவலகத்தை உருவாக்கி, பணியாளர்களை நியமித்து, 37 மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர் அலுவலர்களைப் பணி யமர்த்தினார். மேலும், இந்த வாரியத்துக்கு, பட்ஜெட்டில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். மாநகராட்சி களிலிருந்து நிதி ஆதாரத்தை உருவாக்கி, ஆண்டுக்கு ரூ.5 கோடி இந்த வாரியத்துக்கு செலுத் துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண் டார். இந்த வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி  கிடைப்பதன் மூலம், தற்போது ரூ. 45 கோடி  இருப்பு உள்ளது. இந்த வாரிய பணத்தை எக்கார ணத்தைக் கொண்டும் வேறு பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இதன்மூலம், தூய்மைப் பணியாளர் களுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை, செயற்கை மரணம், உடல் உறுப்புகள் இழப்பு உள்ளிட்டவற்றுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகின்றன. சில மாவட்டங்களில் மாநகராட்சிகளில் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் ஊதியம் போதுமான தாக இல்லை என்ற புகார் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கையாக வைக்கப்படும். ஊரகப் பகுதி களில் ஊதிய விகிதத்தை ரூ.7,500 ஆக வழங்குவ தற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை பரிசீ லனை செய்வதாக துணை முதலமைச்சர் உறுதி யளித்துள்ளார். மாவட்டங்களில் மாதம் ஒரு நாள் தூய்மைப்  பணியாளர் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் பெயரில் தூய்மைப்  பணியாளர்களுக்கு விருது வழங்கவும் வலி யுறுத்தப்பட்டுள்ளது” என்றார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண்.இராமநாதன் (தஞ்சா வூர்), க. சரவணன் (கும்பகோணம்) உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.