tamilnadu

img

445% வராக்கடன் ஒரு வங்கியையே விழுங்குகிறது

(ரூ. கோடிகளில்) 

  •      2017ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் 920, ஒதுக்கீடு 474, நிகர லாபம் 446, செயல்பாட்டு லாபத்தில் நிகர லாபம்  48.47 விழுக்காடு.
  •     2018ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் 1331, ஒதுக்கீடு 696, நிகர லாபம் 635, செயல்பாட்டு லாபத்தில் நிகர லாபம்  34.68 விழுக்காடு.
  •      2019ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் 1940, ஒதுக்கீடு 1073, நிகர லாபம் 867, செயல்பாட்டு லாபத்தில் நிகர லாபம்  44.69 விழுக்காடு.
  •      2020ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் 2752, ஒதுக்கீடு 2246, நிகர லாபம் 506, செயல்பாட்டு லாபத்தில் நிகர லாபம்  18.28 விழுக்காடு.
  •     2021ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபம் 3091, ஒதுக்கீடு 2583, நிகர லாபம் 508, செயல்பாட்டு லாபத்தில் நிகர லாபம்  16.43 விழுக்காடு.

1943இல் மகாரா ஷ்டிரா மாநிலத்தின்  கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய சிறிய நகரங்களில் இரண்டு கிளை களுடன் ரத்னாகர் வங்கி தொடங்கப் பட்டது. இது 1959இல் அட்டவணை வங்கியாக மாறியது. இந்த வங்கி,  பல பாரம்பரிய தனியார் வங்கி களைப் போலவே, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து, அதன் வணிக அளவுகோல்களில் மெதுவான மற்றும் நிலையான முன்னேற்றத்தை அடைந்தது. 2010ஆம் ஆண்டு, பாங்க் ஆஃப் அமெரிக்காவின் நமது நாட்டு முன்னாள் தலைவரான ஸ்ரீ  விஸ்வவீர் அஹுஜா இந்த வங்கி யின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். வங்கியின் மொத்த பங்கு மதிப்பில் சுமார் 3.03 விழுக்காடு அவர் வைத்திருந்தார். அவரது காலத்தில், வங்கி பங்குகள் சந்தையில் விற்கத் துவங்கியது மற்றும் வங்கியின் பெயர் 2014இல் ஆர்பிஎல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 25 டிசம்பர் 2021 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை மருத்துவ விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்  கொண்டது. வங்கியின் அப்போதைய செயல் இயக்குநராக இருந்த ஸ்ரீ ராஜீவ் அஹுஜா, வங்கி யின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புகளை ஏற்கும்படி கேட்டுக்  கொள்ளப்பட்டார். ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு அதன் வாடிக்கை யாளர்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் இந்த திடீர் மாற்றத்திற்கு ரிசர்வ் வங்கியோ அல்லது ஆர்பிஎல் வங்கி யோ எந்தக் குறிப்பிட்ட காரணத் தையும் தெரிவிக்கவில்லை.

இந்த வங்கிக்கு ஆட்சியாளர் களின் ஆதரவும் ஊடகங்களின் ஆத ரவும் உண்டு. இது வங்கியின் பங்கு களை 660 ரூபாய் வரை உயர்த்த உத வியது. முன்னாள் நிர்வாக இயக்கு னர் மற்றும் தலைமை நிர்வாக அதி காரி தனது சொந்த பங்குகளின் பெரும் பகுதியை இந்த காலத்தில் விற்று விட்டார். மேலும் வியாபார அளவுகள் திடீரென அதிகரித்தது. இதனை ஒரு கட்டுப்பாட்டாளர் மற்றும் மேற்பார்வையாளர் என்ற முறையில் ரிசர்வ் வங்கி ஆய்வு மற்றும் விசாரணை செய்யத் தவறி விட்டது.  பெரிய கார்ப்பரேட்டுகளுக்கான கடன்கள் மற்றும் அந்த கடன்களில் சில குறுகிய காலத்தில் வராக்கடனானது ஆகியவை வங்கி வணிகத்தில் பெரும் குழப்பத் தை உருவாக்கின. வங்கியானது அதன் 25 செயல்படாத சொத்துக் களை சொற்ப விலையில்விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.  இதன் விளைவாக அதன் நிகர லாபத்தில் செங்குத்தான சரிவு ஏற் பட்டது. ரத்னாகர் வங்கியின் செயல் பாட்டு மற்றும் நிகர லாபம் மற்றும் மோசமான கடன்களுக்கான ஒதுக்கீடு ஆகியவற்றை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இந்த புள்ளி விவரங்களே வங்கி யின் நிலையை தெளிவாக படம்  பிடித்து காட்டுகின்றன. செயல்பாட்டு லாபத்தினை ஒப்பு நோக்கும்போது நிகர லாபம் வெகுவாகக் குறைந்துள் ளது. வங்கியின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடின உழைப்பால் ஈட்டிய இயக்க லாபம் செயல்படாத சொத்துகளுக்கான ஒதுக்கீடுகளுக்காக வீணாகிவிட் டது. 2017இல் நிகர லாபம் செயல் பாட்டு லாபத்தில் 48 விழுக்காடா கும். அதேசமயம் 2021இல் செயல்பாட்டு லாபம் 236 விழுக்காடு அதிகமாக இருந்தாலும், நிகர லாபம் செயல்பாட்டு லாபத்தில் 16  விழுக்காடாக சுருங்கிவிட்டது. இதே  4 ஆண்டுகளில் வராக்கடனுக்கான ஒதுக்கீடு 445 விழுக்காடு அதிகரித் துள்ளது என்பது திகைக்கவைக்கி றது.

4 வருட காலப்பகுதியில் செயல் பாட்டு லாபம் ரூ.2171 கோடி அதிக ரித்துள்ளது, அதேசமயம் நிகர லாபம் 62 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. வங்கியின் பல்வேறு வணிக அளவு கோல்கள் பலவீனமாகவே உள்ளன.  வாடிக்கையாளர்கள் தங்கள் டெபா சிட்டுகளின் பாதுகாப்பு குறித்து ஏதுமறியா நிலையில் உள்ளனர். ரிசர்வ் வங்கி மற்றும் ஆர்பிஎல் நிர்வாகம், ஆபத்தான கடனை ஒப்பிடும் போது மூலதனம் 16.43% உள்ளது என்று கூறி பலவீனங்களை மறைக்க முயல்கின்றன. ஆனால் அவ்வங்கியின் வியாபார அளவு கோள்களை நோக்கும்போது உண் மை நிலை வேறுவிதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் சார்பாக ஒரு பிரதிநிதி ஏற்கனவே ஆர்பிஎல் இயக்குநர் குழுவில் உள்ளார். இருந்தும் கூட, ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டாளர் என்ற முறையில் காட்டும் அலட்சிய அணுகுமுறை டெபாசிட் தாரர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி, யெஸ் வங்கி, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி  போன்றவற்றில் சமீபத்திய நிகழ்வு கள், ஆர்பிஎல்லின் ஆரோக்கியம் மற்றும் தங்களின் டெபாசிட்டுகளின் பாதுகாப்பு குறித்த கவலை மற்றும் பதற்றத்தை டெபாசிட்தாரர்கள் மனதில் உருவாக்கியுள்ளன. இந்த  வங்கியும் உடனேயோ, சிறிது காலத் திலோ கடுமையான நெருக்கடியை சந்திக்க இருக்கிறது என்பதற்கு  போது மான அறிகுறிகள் தெரிகன்றன.                                                              

- அ.சீனிவாசன்  தமிழில் : அம்பத்தூர் ராமு