tamilnadu

img

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி  ஆசிரியர் நலச் சங்க நிகழ்வு

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி  ஆசிரியர் நலச் சங்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி, ஆக.18 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு ஓய்வு  பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க வட்ட கிளையின் வட்டத் தேர்தல் திங்களன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் களாக  சு.ஜெயராமன், வி.சௌந்தர்ராஜன் ஆகியோர் செயல் பட்டனர். வட்ட தலைவராக தி.தமிழ்ச்செல்வன், செயலாளராக  வி.ராஜேந்திரன், பொருளாளராக வ. இளங்கோவன், துணைத் தலைவர்களாக ஆர்.காளியப்பன், கே.குஞ்சித பாதம், ஆர்.மல்லிகா, துணைச் செயலாளர்களாக சு.முரு கானந்தம், சொ.ராஜரெத்தினம், செந்தமிழ்ச்செல்வி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.