தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் மறைவையொட்டி, விருதாச்சலத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ஆர். ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.