தனியார்வசம் போகும் மெரினா கடற்கரை
மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்
மெரினா கடற்கரை உட்பட 5 முக்கியப் பகுதிகளின் பராமரிப்பு பணிகளை தனியார்மயமாக்க சென்னை மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் வியாழனன்று (பிப்.27) ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 250 ஏக்கர் பரப்பளவு உள்ள மெரினா கடற்கரைக்கான ஓராண்டு பராமரிப்புப் பணியை, 7 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஏலம் விடுவதற்கான தீர்மானத்தை மேயர் பிரியா கொண்டு வந்தார். மேலும், 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட சீனிவாசபுரம், எல்லியட்ஸ், திருவான்மியூர், புது கடற்கரை ஆகிய 4 கடற்கரையையும் ஓராண்டு பராமரிக்கும் வகையில் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாருக்கு ஏலம் விடும் தீர்மானத்தையும் நிறைவேற்றினார். மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்ட லங்களில் 1002 பொதுக் கழிப்பிடங்கள் வடிவமைத்தல், கட்டுதல், நிதி மேலாண்மை செயலாக்குதல், திருப்பி ஒப்ப டைத்தல் என்ற முறையில் 1,244 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான திட்டங்களையும் தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள 127 வணிக வளாகங்க ளில் 5 ஆயிரத்து 914 கடைகள் உள்ளன. இவற்றின் வாயி லாக மாதம் 180 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், இந்த வணிக வளாக கட்டடங்களின் குத்தகைக் காலம், 9 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக அதி கரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாத வாடகையை 5-ஆம் தேதிக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் 12 சதவிகிதம் தனிவட்டி செலுத்த வேண்டும். மேலும், ஆண்டுதோறும் 15 சதவிகிதம் வாடகை உயர்த்தப் பட்டு வந்த நிலையில், அதை 5 சதவிகிதமாக குறைத்தும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.