tamilnadu

img

திருவண்ணாமலை ஆட்டோக்களுக்கு க்யூ.ஆர் கோடு வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை ஆட்டோக்களுக்கு  க்யூ.ஆர் கோடு வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை, செப்.15 -  திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு க்யூ.ஆர் கோடு வழங்க வேண்டும் என்று மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை தமிழ் மின் நகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். சிவக்குமார் தலைமை தாங்கினார், ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் எம். ராஜா சங்க கொடி ஏற்றி வைத்தார், நகர தலைவர் து.யுவராஜ் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் என். பிரம்மா அஞ்சலி தீர்மானம் வாசித்தார், சிஐடியு நிர்வாகி முரளி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே. சரவணன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஜி.வேலு நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜ், மின்னரங்க சங்க நிர்வாகி கே. காங்கேயன், சுமை பணி சங்க செயலாளர் இரா.பாரி, அரசு போக்குவரத்து அரங்க மண்டல தலைவர் எ. சேகரன், வழக்கறிஞர்கள் எஸ்.அபிராமன், எம். ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில துணைப் பொதுச் செயலாளர் எம். சந்திரசேகரன் நிறைவுறையாற்றினார். நகர துணைத் தலைவர் எம். ரமேஷ் நன்றி கூறினார். தீர்மானங்க ள் வெளி மாநிலங்களிலிருந்து வரும் கார்களை மாநகர எல்லைக்குள் வராமல் பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து ஆட்டோக்களுக்கும் க்யூ.ஆர் கோடு வழங்கிட வேண்டும், திருவண்ணாமலை நகரில் அனைத்து தெருக்களிலும் உள்ள பேரிகாடுகளை அகற்றிட வேண்டும், திருவண்ணாமலை நகர சாலைகளில் பாதாள சாக்கடைக்குத் தோண்டிய பள்ளங்களைச் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு தலைவராக கே. நாகராஜன், செயலா ளராக கே.சரவணன், பொருளாளராக ஜி. வேலு ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.