tamilnadu

வெண்மணியில் இன்று புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறப்பு விழா

நாகப்பட்டினம், டிச.24 - கீழவெண்மணியில் புதுப்பிக் கப்பட்ட நினைவக திறப்பு விழா வும் ஐம்பத்தி மூன்றாம் ஆண்டு வெண்மணி தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ் வும் டிசம்பர் 25 (இன்று) நடை பெற இருக்கிறது. வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் சிதி லமடைந்த பழைய கட்டிடத்தை நீக்கிவிட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவகத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. கட்சியின்  மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந் தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், ஏ.லாசர், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், நாகை  மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து,  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஐ.வி. நாகராஜன், வி.தொ.ச மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், வி.ச. மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராசு,  சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ். சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி  செலுத்துகின்றனர்.

;