உலக புராதனச் சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக்கோட்டை
சென்னை, ஜூலை 12 - உலக அளவில் புராதனமான இடங் களை யுனெஸ்கோ குழு ஆய்வு செய்து, அவற்றை உலக புராதன சின்னமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள், மராட் டிய மன்னர்களின் ராணுவ கேந்தி ரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாச்சார ரீதியிலான உலக புராதன சின்னமாக அறிவிக்க வேண் டும் என யுனெஸ்கோவிற்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்து இருந்தது. அந்தப் பட்டியலில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையும் இடம் பெற்றி ருந்தன. மராட்டியர்கள் கி.பி. 1678 முதல் 1697 வரை செஞ்சிக்கோட்டையை தலை மையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தால் பிரதான பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 27 அன்று யுனெஸ்கோ பிரதிநிதி உள்ளிட்ட ஒன்றிய அரசின் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செஞ்சிகோட்டை உச்சி மலை வரை ஆய்வு செய்தனர். கோட்டையில் உள்ள கல்யாண மஹால், யானைக் குளம், தர்பார் மண்டபம், நெற்களஞ்சியம், கோட்டையில் உள்ள பாலம், கோட்டை மலை மீது உள்ள நெற்களஞ்சியம், பீரங்கிகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்க ளைப் பார்வையிட்டு சென்றார். இந்நிலையில் யுனெஸ்கோ நிறு வனம் மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆட்சிசெய்த 11 கோட்டை கள், தமிழகத்தில் விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை ஆகியவற்றை உலக புராதனச் சின்னங் களாக அறிவித்துள்ளது. இதனை சுற் றுலா பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலை ரயில், கும்பகோணம் ஐராதீஸ்வ ரர் கோவில் ஆகியவை புராதன நினை வுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.