tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மழைக்கால  மீட்பு ஒத்திகை

மதுராந்தகம், செப். 13- மதுராந்தகம் ஏரி யில் வடகிழக்குப் பருவ மழையொட்டி தீயணைப்பு துறை சார்பில், மழைக்கால சிறப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில், அரசு அதிகாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பருவ மழையை எதிர் கொள்ளும் வித மாக மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி யில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளியன்று நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீ அணைப்பு துறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.

தங்கம் விலை சற்றுக்குறைந்தது

சென்னை, செப்.13- சென்னையில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கும் விற்பனை செய்யப்படு கிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ. 21 குறைந்து ஒரு கிராம் ரூ.11,149-க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ. 89,192க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.143-க்கும், கிலோ ரூ.1,43,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஓதுவார் பயிற்சிப் பள்ளியில்  விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை,செப்.13-  வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ /மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பகுதி நேரப் பயிற்சி வகுப்பின் காலம் 4 ஆண்டுகள்ஆகும். விண்ணப்பங்களைwww.vadapalani andavar.hrce.tn.gov.in, www.hrce.tn.govin ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 13.10.2025 க்குள் துணை ஆணையர்/செயல் அலுவ லர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை600026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வண்டல் மண் விற்பனை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி, செப்.13- விவசாய பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் வண்டல் மண்ணை சிலர் முறைகேடாக விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று  கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினர். குறிப்பாக, விவசாயிகள் தங்களின் நிலங்கள் சமன் செய்து பயிர் சாகுபடி செய்து பயன் பெற வசதியாக அரசு ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. சிட்ட நகலுடன் கணினியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தாசில்தார் அனுமதி வழங்கி வருகிறார். இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையில் வண்டல் மண் எடுக்க அளவீடு செய்து தர வேண்டிய நிலையில், சிலர் அதிகாரிகள் உதவியுடன் அனுமதி மீறி ஜேசிபிகள் மூலம் டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்துச் சென்று வீட்டுமனைகளுக்கு, செங்கல் சூளைகளில் யூனிட் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர், என்று குற்றம் சாட்டினர்.