tamilnadu

img

பாப்பம்பட்டியில் மருத்துவ முகாம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. துவக்கி வைத்தார்

பாப்பம்பட்டியில் மருத்துவ முகாம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. துவக்கி வைத்தார்

திண்டுக்கல், செப்.24- பழனி ஒன்றியம் பாப்பம்  பட்டி வட்டார மருத்துவ மனையில் செவ்வாயன்று நடைபெற்ற நலமான பெண்  கள் வளமான குடும்பம் மருத்  துவ முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வருண் பிரசாத், பழனி நகர்மன்ற துணைத்தலைவர் கே.கந்த சாமி, சிபிஎம் மாவட்ட செயற்  குழு உறுப்பினர் எஸ்.கம லக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலைவேடன் சமூக மக்களுக்கு இனச்சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மெத்தப்பட்டியில் ஞாயிறன்று பேரவைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தா.அஜாய்கோஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி, மலைவேடன் சங்க மாவட்டத் தலைவர்கள் ஏ.சுப்பையா, எம்.சௌந்திரராஜன், எஸ்.தங்கப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.