tamilnadu

img

சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் தேர்வு

திண்டுக்கல், டிச.30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23 ஆவது மாநாடு டிசம்பர் 28, 29 ஆகிய தேதி களில் வேடசந்தூரில் நடை பெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறை வுரையாற்றினார்.  மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் தேர்ந் தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக என்.பாண்டி, கே.பால பாரதி, பி.செல்வராஜ், கே. ஆர்.கணேசன், பி.வசந்தா மணி, கே.அருள்செல்வன், வி.ராஜமாணிக்கம், கே.பிர பாகரன், ஜி.ராணி, எஸ். கமலக்கண்ணன், டி.முத்துச் சாமி, எம்.ராமசாமி ஆகி யோர் உட்பட  41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டத் தில் தொடர்ந்து மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதை தடுக்க  பள்ளி, கல்லூரிகளில் விசாகா குழுக்களை அமைத் திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

தமிழ் நாடு அளவிலான தேசிய  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவுக்கு செய லாளரை ,முதல்வர் உடனடி யாக நியமிக்க வேண்டும்.  பழனி வட்டம் பெரியம்மா பட்டியில் நரேந்திரா டயரி நிறு வனத்திடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த உபரி நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விவசா யம் செய்து வரும்  உண்மை யான விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆண்டிபட்டியில் ஏழை விவ சாயிகளின் நிலங்களை அப கரிக்க முயலும் மில் அதிபர் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பழனி நகராட்சி பகுதியில்  நெடுஞ்சாலைத்துறையில் ரூ.58 கோடியில் மழை நீர், கழிவு நீர் ஓடைகள், சாலை அமைப்பதில் நடந்துள்ள ஊழல் குறித்து விசார ணைக் குழு அமைத்து, நட வடிக்கை எடுக்க வேண்டும்.  திண்டுக்கல் மாநகராட்சி யில் வாகன நெருக்கடியை, போக்குவரத்தை  சமா ளிக்க திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் புறநகர் பகு தியில்  பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.  புலையர் சமூக மக்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும். மலைவேடன் சமூக மாணவ, மாணவியர்களுக்கு பழங் குடியின சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.