புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணி
புதுக்கோட்டை, செப்.27 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து அக். 3 முதல் 12 ஆம் தேதி வரை நகர்மன்ற வளாகத்தில் நடத்தவுள்ள புத்தகத் திரு விழாவையொட்டி, விழிப்புணர்வு புத்தகப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலை யத்தில் இந்தப் பேரணியை, மாநகராட்சி மேயர் செ.திலகவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் கூ.சண்முகம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, புத்தகத் திரு விழா ஒருங்கிணைப்பாளர்கள் அ. மண வாளன், எம். வீரமுத்து, கவிஞர் ஜீவி, விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், க. சதாசிவம், மு. கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மன்னர் கல்லூரி தேசிய மாணவர் படை யினரும், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்த இந்தப் பேரணி, நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் புத்த கங்களைக் கையில் ஏந்தி, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
