புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
புதுச்சேரி, ஜூலை 30- புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதே போல் அனைத்து ஊழி யர்களுக்கும் 7 வது புதிய குழுவை அமல் படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், இது வரை நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை. இந்த நிலையில், தங் களின் கோரிக்கையை வலி யுறுத்தி சாலை போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலை மையில் ஜூலை 29 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். செவ்வாயன்று இந்த போராட்டம் 2 வது நாளாக நீடித்தது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் உள்ள பணிமனைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் 2 வது நாளாக தொடர்வதால் அரசு பேருந்துகள் பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 144 அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இத னால் புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணா மலை மற்றும் வெளிமாநி லங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வந்தது. தற்போது இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருப்பது கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் பொதுமக்கள் நோயாளிகள் என பல்வேறு தரப்பிலும் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். இந்த நிலை யில், தங்களது கோரிக்கை கள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட் டம் தொடரும் என்று சாலை போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளனர். இப்போராட்ட த்தையொட்டி புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு உள்ள பிஆர்டிசி பேருந்து பணிமனை முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.