ரயில்வே மேம்பாலம் அமைத்திடுகநகர் பகுதி பொது மக்கள் குமுறல்
மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
கோவை, செப்.1- ஒண்டிப்புதூர், சூர்யா நகர் பகு தியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, பல்வேறு குடியிருப்போர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி கிழக்கு மண் டல அலுவலகம் முன்பு திங்களன்று முற்றுகையிட திரண்டதால் பர பரப்பு ஏற்பட்டது. ஒண்டிப்புதூர், சூர்யா நகரில் உள்ள ரயில்வே கடவு எண் 3-இல் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக் கையை வலியுறுத்தி தொடர்ச்சி யாகப் பல போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 2- ஆம் தேதி நடைபெறவிருந்த ‘மக் களைத் தேடி முதல்வர்’ முகாமில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டிருந்த னர். இதற்காக வீடு வீடாக துண் டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர் பாகப் பேச்சுவார்த்தை நடத்த மாநக ராட்சி கிழக்கு மண்டல அதிகாரி கள் அழைப்பு விடுத்தார். அதன்படி, திங்களன்று 300-க்கும் மேற்பட் டோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், கிழக்கு மண்டலத் தலைவர் லக்குமி இளஞ்செல்வி, இணை ஆணையாளர் முத்துச்சாமி, கூடு தல் முதன்மைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட மாநக ராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குடி யிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறு கையில், சூர்யா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவலிங்காபு ரம், காமாட்சி நகர், சக்தி நகர் போன்ற பகுதிகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள ரயில்வே கேட்டை நிரந் தரமாக மூடிவிட்டால், பொது மக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு ரயில்வே கேட்டைப் பயன்ப டுத்த வேண்டி வரும். இதனால், பள்ளி செல்லும் மாணவ-மாணவி கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா வார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, அந்த இடத்தில் மேம் பாலம் அமைப்பதுதான். இந்தப் பிரச்சினை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக முதல் வர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தும், போராட்டம் நடத்தி யும் அரசின் கவனத்தை ஈர்த்துள் ளோம். இதனைத்தொடர்ந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் வந்து பார்வையிட்டு, மேம்பாலம் அமைக்க உறுதியளித்தார். இருந்தபோதிலும், இதுவரை எந்த முன்னெடுப்பும் நடக்கவில்லை. அரசு உடனடியாக மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காகவே இந்த பேச்சுவார்த்தையில் பங் கேற்றதாக தெரிவித்தனர். மேலும், அனைவரின் கருத்துக் களையும் கேட்டறிந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் கலந்தா லோசித்து, மேம்பாலம் கட்டுவ தற்கு உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இந்தப் பேச்சுவார்த்தையில், சிவலிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் குடியிருப்போர் நல சங் கங்களின் ஒருங்கிணைப்பாளர் வி. தெய்வேந்திரன், தலைவர் சொக்க லிங்கம், செயலாளர் சுப்ரமணியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளான தி.மு.க. சுரேஷ், அ.தி.மு.க. சுரேஷ்குமார், பா.ஜ.க. வாசு குமார், ஹரிதாஸ், தே.மு.தி.க. அசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.