நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார், திருக்களாச்சேரி, திருவிளையாட்டம், மேமாத்தூர் உட்பட மாவட்டம் முழுவதும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக செம்பனார்கோவில் வடக்கு, தெற்கு, மத்திய ஒன்றியங்கள் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன. ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அப்துல் மாலிக், அமிர்த விஜயக்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.