நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 1- விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது என அறிவித்துள்ள ஒன்றிய அரசின் அறிவிப்பை கண்டித்தும், அதனை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணப்பாறை வட்டக் குழு சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க வட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிதம்பரம், வட்டத் தலைவர் பிச்சைக்கண்ணு, வட்டப் பொருளாளர் பெரியசாமி, வட்ட துணைத் தலைவர் அந்தோணிசாமி, குழந்தைவேல் சிபிஎம் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் அய்யாவு ஆகியோர் உரையாற்றினர். இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.